ஹிண்டன்பர்க்கின் ஆட்டம் காண வைத்த அறிக்கை.. ஒரே நாளில் அதானி குழுமத்திற்கு ரூ.55,000 கோடி இழப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி குழுமத்தினை சேர்ந்த பங்குகள் ஒரே நாளில் கிட்டத்தட்ட 55,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பினை இழந்துள்ளன.

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அதானி குழும பங்குகள் 85% சரிவினைக் காண சாத்தியம் இருப்பதாக கூறிய அறிக்கை வெளியான நிலையில் இந்த அளவுக்கு இழப்பினை கண்டுள்ளது.

அதானி குழுமத்தினை சேர்ந்த 7 பங்குகளான அதானி டோட்டல் கேஸ், அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் நிறுவங்களின் சந்தை மதிப்பானது 54,542 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளன..

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் FPO.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..! அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் FPO.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!

எது எவ்வளவு சரிவு?

எது எவ்வளவு சரிவு?

இது 17.75 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 17.20 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.

அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 5.35% சரிவினைக் கண்டு, 720 ரூபாயாகவும், அதானி வில்மர் பங்கு விலையானது 4% சரிவினைக் கண்டும், அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் விலையானது 3% சரிவினைக் கண்டும் காணப்படுகின்றது.

 சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு

இதே அதானி எண்டர்பிரைசஸ் 2.5% சரிவினைக் கண்டும், அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலையானது 1.5% சரிவினைக் கண்டும் காணப்படுகின்றது.

இதில் அதானி டோட்டல் கேஸின் சந்தை மதிப்பானது 13,800 கோடி ரூபாய் சரிவினைக் கண்டும், அதனை தொடர்ந்து அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 10,167 கோடி ரூபாயாகவும் சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி எண்டர்பிரைசஸ் 9604 கோடி ரூபாயும், அதானி போர்ட்ஸ் 8791 கோடி ரூபாயும் சரிவினைக் கண்டுள்ளது.

கடன் அழுத்தம்

கடன் அழுத்தம்


அதானி குழும நிறுவனங்களின் கடன் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மேலும் நிறுவனம் கடன் பெறுவதற்காகவும் சில பங்குகளை பிணையமாக வைத்தும் கடன் பெற்றுள்ளது. இது முழு குழுமத்திற்கும் ஆபத்தான நிதி நிலைக்குள் தள்ளுகிறது என்றும் எச்சரித்துள்ளது.

உரிமை பங்கு வெளியீடு

உரிமை பங்கு வெளியீடு

 

அதானியின் தலைமை நிதி அதிகாரியான ஜுகேஷிந்தர் சிங் ஜனவரி 21, அன்று, எங்களிடம் கடன் குறித்து யாரும் கேள்வி எழுப்பியதில்லை. எந்தவொரு முதலீட்டாளரும் கேட்டதில்லை என கூறியதாக செய்திகள் வெளியானது.

இதற்கிடையில் அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் அதன் உரிமை பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இதன் மூலம் 2.5 பில்லியன் டாலர் நிதியினை திரட்டவுள்ளது.

வலுவான அதானி குழும வளர்ச்சி

வலுவான அதானி குழும வளர்ச்சி

இது அதானி குழுமத்தின் வலுவான வளர்ச்சிக்கு முன்னதாக இப்படி ஒரு உரிமை பங்கு வெளியீடானது செய்யவுள்ளது. இது ஒரு மிகப்பெரிய மூலதன திட்டமிடலாகும். இது பெரியளவில் பிரச்சனை இல்லாத ஒரு வளர்ச்சித் திட்டத்தால் ஆதரிக்கப்படலாம். இது வளர்ச்சியினை ஊக்குவிக்க பயன்படலாம்.

எச்சரிக்கை அறிவிப்பு

எச்சரிக்கை அறிவிப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அதானி குழுமத்தின் கடன் விகிதமானது அதிகரித்துள்ளது. மேற்கொண்டு அதானி குழுமம் அதிகளவிலான கடனை வாங்கி வருகின்றது என ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

சமீபத்திய காலமாக நிறுவனம் தொடர்ந்து அதிகளவிலான முதலீட்டு செய்து வருகின்றது. பல புதிய வணிகங்களில் நுழைந்து வருகின்றது என எச்சரிக்கை விடுத்தது. இது சந்தை முதலீட்டாளர்களையும், சந்தை ஆய்வாளர்களுக்கும் மத்தியில் அப்[போதே பெரும் கவலையை ஏற்படுத்தியது. அந்த அறிவிப்பு வெளியான நிலையில் அந்த சமயமத்தில் அதானி குழும பங்குகள் பலத்த சரிவினைக் கண்டது நினைவுகூறத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

adani group of 7 stocks lost Rs.55,000 crore in market capitalization: do you know why?

adani group of 7 stocks lost Rs.55,000 crore in market capitalization: do you know why?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X