அதானி குழுமம் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பின்னர், அதானி குழுமம் பல்வேறு சவால்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகின்றது. எனினும் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க அதானி குழுமம் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
குறிப்பாக நம்பிக்கையை மீட்டெடுக்கும் விதமாக கடனை திரும்ப அடைத்து வருகின்றது. பல கடன்களுக்கு கால அவகாசம் என்பது இருந்தாலும் கூட முன் கூட்டியே அடைத்தும், அடைக்கவும் திட்டமிட்டு வருகின்றது.
எவ்வளவு கடன் அடைப்பு
இந்த நிலையில் இந்திய வங்கிகள் மற்றும் சர்வதேச வங்கிகளுக்கும் 7374 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை அடைத்துள்ளதாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் குற்றச்சாட்டினை அடுத்து பல்வேறு தரக்குறியீட்டு நிறுவனங்களும், அதானி குழுமத்தின் மதிப்பீட்டினை திருத்தி அமைத்தன. பல நிதி அமைப்புகளும் கடன் கொடுக்க முடியாது என அறிவித்தன.
கடன் அடைத்தல்
இதனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களும் பங்குதாரர்களும் குழப்பமடைந்தனர் என்றே கூறலாம். ஆனால் அப்படி கூறியவர்களுக்கெல்லாம் நாங்கள் கடனை திரும்ப செலுத்தும் தகுதியுடன் தான் இருக்கிறோம் என செலுத்த வேண்டிய நிலுவையுடன் சேர்த்து, எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்தியுள்ளது. .
கடனை அடைப்பதில் தீவிர கவனம்
ஜனவரி 24-க்கு பிறகான இப்பிரச்சனைகளுக்கு மத்தியில் அதானி குழுமம், கடனை அடைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்தாலும், ஆரம்பத்தில் இருந்தே அதானி குழுமம் அதனை மறுத்து வருகின்றது. இது சரியான ஆய்வறிக்கை அல்ல, இது குறித்து எங்களிடம் விசாரிக்கப்படவே இல்லை என தெரிவித்தது. இதற்கிடையில் அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பானது பாதிக்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
தடைகளை உடைப்பு
அதானி குழுமம் வங்கிகள், சர்வதேச வங்கிகள், கடன் பத்திரங்கள், பங்குகளை பிணையமாக வைத்து கடன் என பல தரப்பில் இருந்தும் தனக்கு தேவையான நிதியினை திரட்டியுள்ளது.
ஆனால் இந்த கடனை சரியாக அதானி குழுமத்தால் திரும்ப செலுத்த முடியாது என சவால் விட்டது. ஆனால் அதானி குழுமமோ அனைத்து தடைகளை உடைத்து கொண்டே வெளியே வந்துள்ளது.
முதலீட்டாளர்கள் நம்பிக்கை
இதற்கிடையில் அதானி குழுமம் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் ஒரு நிலையான வருமான roadshows காட்சியை நடத்தியது. இதேபோல மார்ச் 7 முதல் மார்ச் 15 வரையில் துபாய், லண்டன் மற்றும் அமெரிக்காவில். நடத்த உள்ளதாகவும் தெரிகின்றது.
இதற்கிடையில் சமீபத்திய வாரங்களாக மீண்டும் அதானி குழுமத்தில் முதலீடுகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அதானி குழும பங்குகள் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
எவ்வளவு முதலீடு?
இதனால் அதானி குழும பங்குகள் முதலீட்டாளர்கள் பெரும் ஆறுதலை அடைந்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த GQG பார்ட்னர்ஸ் நிறுவனம் அதானி குழுமத்தில் அண்மையில் 15,446 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களாகவே அதானி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வருகின்றன. இது இனியும் அதானி குழும பங்குகள் ஏற்றம் காண வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications