இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக இருந்த அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு தினமும் பல்லாயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டை இழந்து வருகிறது.
போர்ப்ஸ் அறிக்கையை தொடர்ந்து, நேற்று விக்கிப்பீடியா அதானி குழுமம் குறித்துப் பல முக்கியக் குற்றச்சாட்டுகளை அடுக்கியது. இதன் மூலம் இன்று ஒரு நாளில் மட்டும் அதானி பங்குகளின் சந்தை மதிப்பு 40000 கோடி ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 98 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
இந்த நிலையில் அதானி குழுமம் ஏற்கனவே திட்டமிட்டப்படி இஸ்ரேல் நாட்டில் இருக்கும் ஹைஃபா துறைமுகத்தைச் சுமார் 1.2 பில்லியன் டாலர் தொகை கொடுத்து மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது.
அதானி குழுமம்
அதானி குழுமம் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் வேளையில், சந்தை மதிப்பில் பெரிய ஓட்டை விழுந்த நிலையிலும் தனது வர்த்தக வாய்ப்புகளையும், வர்த்தக விரிவாக்கத்தையும் விடாமல் பிடித்து வருகிறது.
அதானி பவர் நிறுவனம்
சமீபத்தில் அதானி பவர் நிறுவனம் சுமார் 7,017 கோடி ரூபாய் மதிப்பிலான டிபி பவர் நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு நிதி பரிவர்த்தனையை நிறைவு செய்யும் காலக்கெடு முடிவடைந்ததால் இந்தக் கையகப்படுத்தல் திட்டத்தில் இருந்து அதானி பவர் வெளியேறியது.
இஸ்ரேல்
இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டின் முக்கியமான ஹைஃபா துறைமுகத்தைக் கையகப்படுத்துவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அதானி குழுமம் 1.2 பில்லியன் டாலர்களை முழுமையாகச் செலுத்தியுள்ளது என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் புதன்கிழமை தெரிவித்தார்.
ஹைஃபா துறைமுகம்
ஹைஃபா துறைமுகம் இஸ்ரேல் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். ஹைஃபா துறைமுகத்திற்காக அதானி குழுமம் முழுவதுமாகப் பணம் செலுத்தியது, இதேபோல் இந்தத் துறைமுகத்தின் வளர்ச்சிக்கு போதுமான பணம் வைத்துள்ளது.
போர்ட் வர்த்தகம்
துறைமுக உள்கட்டமைப்பு என்பது அதானி குழுமத்தின் முக்கிய வணிகமாகும், மேலும் என்ன செய்வது என்பது அவர்களுக்குத் தெரியும். இது ஒரு மூலோபாயச் சொத்து மற்றும் ஹைஃபா துறைமுகம் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என இஸ்ரேலிய தூதர் கூறினார்.
30 ஆண்டு நட்புறவு
இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இஸ்ரேலிய தூதர் அதானியின் முதலீட்டின் முக்கியத்துவத்தை மூலோபாயமானது என வலியுறுத்தினார், மேலும் இஸ்ரேல் நாட்டின் பிற துறைகளிலும் அதானி குழுமம் அதிக முதலீடுகளை எதிர்பார்க்கிறது எனத் தெரிவித்தார்.
மத்தியதரைக் கடல்
மத்தியதரைக் கடலில் இரண்டு துறைமுகங்கள் உள்ளன. இதில் ஹைஃபா துறைமுகம் ஒரு மூலோபாயச் சொத்து. நாங்கள் அதை ஒரு இந்திய நிறுவனத்திற்கு வழங்குவது என்பது மூலோபாயச் சொத்துக்களை இந்திய நிறுவனங்களின் கைகளில் டெபாசிட் செய்வதில் உள்ள ஆழமான நம்பிக்கையின் அடையாளச் சின்னம் என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் புதன்கிழமை தெரிவித்தார்.
1.2 பில்லியன் டாலர் ஒப்பந்தம்
சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் ஹைஃபா துறைமுகத்தைக் கைப்பற்றுவதற்கான 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைச் செய்தது. இதன் மூலம் அதானி குழுமம் மத்தியதரைக் கடல் வர்த்தகத்தை அதிகம் பெறுவது மட்டும் அல்லாமல் இந்திய துறைமுகங்களுக்கும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற முடியும்.
செயற்கை நுண்ணறிவு
மேலும் அதானி குழுமம் மத்தியதரைக் கடலில் இருக்கும் ஹைஃபா துறைமுகத்தைக் கைப்பற்றுவது மட்டும் அல்லாமல் இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரமான டெல் அவிவ்-ல் artificial intelligence lab அமைக்கவும் திட்டமிட்டு உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications