4 சிமெண்ட் நிறுவனத்தை அலேக்கா வாங்கப்போகும் கௌதம் அதானி.. ஆட்டம் ஆரம்பம்..!!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்துள்ள அதானி குழுமம் அடுத்தடுத்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஹிண்டன்பெர்க் பிரச்சனைக்குப் பின்பு அதிகளவிலான கடனை அடைந்த அதானி குழுமம், தற்போது புதிய கடனை வாங்கி முதலீடு செய்யத் துவங்கியுள்ளது.

இதன் அடிப்படையில், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், சிமெண்ட்-க்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதேபோல் சீனாவில் உருவானது போல் இந்தியாவில் விரைவில் ரியல் எஸ்டேட் புரட்சி வெடிக்க உள்ளது.

4 சிமெண்ட் நிறுவனத்தை அலேக்கா வாங்கப்போகும் கௌதம் அதானி.. ஆட்டம் ஆரம்பம்..!!

இந்த நிலையில் சிமெண்ட் துறையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த அதானி குழுமம் பல சிமெண்ட் நிறுவனங்களை அடுத்தடுத்து கையகப்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளது.

இந்த நிறுவன கைப்பற்றுவதன் மூலம் அதானி குழுமம், அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் நாட்டின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக உருவெடுக்க இலக்கு வைத்துள்ளது. இதற்காக, 3 பில்லியன் டாலர் அதாவது கிட்டத்தட்ட ரூ.24,500 கோடி மதிப்பிலான நிதியை ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி அதானி குழுமம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பென்னா சிமெண்ட், குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட சௌராஷ்ட்ரா சிமெண்ட், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸின் சிமெண்ட் பிரிவு, மற்றும் ABG ஷிப்யார்ட் நிறுவனத்தின் வஜ்ராஜ் சிமெண்ட் ஆகியவற்றை கைப்பற்றும் லிஸ்டில் வைத்துள்ளது.

இந்திய அரசின் தொடர் கேப்எக்ஸ் முதலீடுகளும், உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் காரணமாக, இந்தியாவில் சிமெண்ட் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த துறையில் ஆதிக்கம் செலுத்த அதானி குழுமம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

பென்னா சிமெண்ட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.9,000 கோடி எனக் கணிக்கப்படுகிறது. இதன் உற்பத்தித் திறன் தற்போது ஆண்டுக்கு 10 மில்லியன் டன் (MTPA) ஆக இருந்தாலும், 15.5 மில்லியன் டன் ஆண்டாக அதிகரிப்பதற்கான விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இதன் தற்போதைய மதிப்பில் குறைந்தது 60 சதவீதம் அதிகரிக்கும்.

சௌராஷ்ட்ரா சிமெண்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,487 கோடி ஆகும். ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸின் சிமெண்ட், கிலிக்கர் மற்றும் மின் நிலையங்களை ரூ.5,666 கோடிக்கு கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டால்மியா பாரத் நிறுவனம் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், பங்குதாரர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது.

பென்னா சிமெண்ட் 2.8 மில்லியன் டன் ஆண்டு திறன் கொண்ட பேக்கிங் டெர்மினல்களையும் கொண்டுள்ளது. சௌராஷ்ட்ரா சிமெண்ட் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் , ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் ஆண்டுக்கு 9.5 மில்லியன் டன் மற்றும் வஜ்ராஜ் சிமெண்ட் ஆண்டுக்கு 6 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்டவை.

இதில் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் வஜ்ராஜ் சிமெண்ட் நிறுவனங்கள் தற்போது கடன் சுமை பிரச்சனையில் சிக்கியுள்ளது.

அதானி சிமெண்ட் கீழ் தற்போது 18 சிமெண்ட் தொழிற்சாலைகள் மூலம் வருடத்திற்கு 79 மில்லியன் டன் சிமெண்ட் தயாரிக்கிறது. கௌதம் அதானி ஆசைப்படும் முதல் இடத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளது, இந்நிறுவனம் வருடத்திற்கு 146 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்கிறது.

அதானி சிமெண்ட் உடன் போட்டிப்போடும் வகையில் அல்ட்ராடெக் சிமெண்ட் தனது உற்பத்தித் திறனை 200 மில்லியன் டன்னாக உயர்த்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது ஆதித்யா பிர்லா குழுமம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+