அதானி குழுமத்தின் மிகப்பெரிய உரிமை பங்கு வெளியீடானது இன்று தொடங்கியுள்ளது. இந்தியாவின் இரண்டாவது FPO-வானது இந்த வெளியீட்டில் முதலீட்டாளர்களின் நிலைப்பாடு என்ன என்பது பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம், போலியான பெயரில் நிறுவனங்கள், உறவினர்களை பயன்படுத்தி போலியான பரிவர்த்தனை அறிக்கை என பல குற்றச்சாட்டுகளை, அதானி குழுமத்தின் மீது முன்வைத்தது அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க்.
கடும் வீழ்ச்சி
இது கடந்த புதன்கிழமையன்று இந்திய பங்கு சந்தையில் கடும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது தவறான தகவல். இது வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் விதமாக வந்த அறிக்கை. எங்களின் வீழ்ச்சியில் ஹிண்டர்ன்பர்க் பலனடைய பார்க்கின்றது. முதலீட்டாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை தகர்க்க பார்க்கிறார்கள் என பரபர கருத்தினையும் முன் வைத்தது.
பின் வாங்க மாட்டோம்
இந்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது நிலைப்பாட்டில் இருந்து மாற மறுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே தாங்கள் செய்த ஆழமான ஆய்வுக்கு பிறகே இந்த ஆய்வறிக்கையினை வெளியிட்டோம்.
ஆனால் அதானி குழுமமோ போதிய சரியான தகவல்களை வைத்து ஹிண்டர்ன்பர்க் ஆய்வு செய்யவில்லை. எங்களிடம் எந்த தொடர்பும் கொள்ளவில்லை. இது தவறானதொரு தகவல் என்றும் கூறியுள்ளது.
சட்ட பூர்வ நடவடிக்கையா?
இதோடு ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆக இப்பிரச்சனையானது இன்னும் பெரிதாகலாம் என்ற அச்சத்தின் மத்தியில், இன்று அதன் எஃப்பிஓ-வும் வெளியாகவுள்ளது.
எதற்குமே பதில் வரலையே
ஹிண்டர்ன்பர்க் நிறுவனமோ நாங்கள் அதானி குழுமத்தினை நோக்கில் பல கேள்விகளை எழுப்பினோம். ஆனால் ஒன்றிற்கு கூட இதுவரையில் அதானி பதிலளிக்கவில்லை. இதற்கிடையில் எங்கள் மீது வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளது. எப்படியிருந்தாலும் நாங்கள் பின் வாங்க போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது.
சட்டபூர்வ நடவடிக்கை எடுங்கள்
எங்கள் மீதும், ஆய்வறிக்கை மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அதானி குழுமம் நினைத்தால், அமெரிக்காவிலேயே அதனை எடுக்கலாம். அப்படி வழக்கு தொடரும்பட்சத்தில் நாங்கள் பல ஆவணங்களை கேட்போம். அதனை சரியாக கொடுத்தாலே போதும். நாங்கள் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை அது. அதனை அதானி குழுமம் ஆய்வு செய்யாமல் கொடுத்துள்ளதாக கூறுவது தவறு என ஹிண்டர்ன்பர்க் கூறியுள்ளது.
2வது நாளாக சரிவில் அதானி பங்குகள்
மொத்தத்தில் அதானி குழுமத்திற்கு சிக்கல் காத்திருக்கு என்றே கூறலாம். இதற்கிடையில் எஃப்பிஓ-விலேயே அதன் தாக்கத்தினை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். இதுவே இந்த ஆய்வறிக்கையின் எதிரொலி எப்படி சந்தையில் எதிரொலிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இதற்கிடையில் இரண்டாவது நாளாக இன்றும் அதானி குழும பங்குகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.
முதலீட்டாளர்கள் அச்சம்
இதற்கிடையில் செபியும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இனி வரவிருக்கும் நாட்களிலும் இந்த சரிவானது தொடரலாமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்னும் அதானி குழும பங்குகள் என்னவாகுமோ? முதலீட்டாளர்கள் கவனமுடன் ஸ்டாப் லாஸ் வைத்து வர்த்தகம் செய்வது பாதுகாப்பினை தரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications