அதானியின் பிரம்மாண்ட திட்டம்.. அடுத்த 10 ஆண்டுகளில் $100 பில்லியன் முதலீடு செய்ய திட்டம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, அடுத்த 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து 20வது ஃபோர்ப்ஸ் குளோபல் சிஇஓ மாநாட்டில் பேசிய கெளதம் அதானி, எனர்ஜி மாற்றத்திற்கு பெரும் முதலீடுகளை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆக ஒரு குழுமமாக, அடுத்த 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்வோம் என அதானி கூறியுள்ளார்.

கேரளாவில் IBM, கனடாவில் இன்போசிஸ்..! ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..! கேரளாவில் IBM, கனடாவில் இன்போசிஸ்..! ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..!

எனர்ஜி மாற்றத்திற்காக 70%

எனர்ஜி மாற்றத்திற்காக 70%

மேற்கண்ட முதலீட்டில் 70% எனர்ஜி மாற்றத்திற்காக ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாங்கள் ஏற்கனவே உலகின் மிகப்பெரிய சோலார் உற்பத்தியாளராக இருக்கிறோம். இன்னும் பலவற்றை செய்ய உத்தேசித்துள்ளோம். இதில் 70 பில்லியன் டாலர் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்காகவும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

உற்பத்தி அதிகரிக்கலாம்

உற்பத்தி அதிகரிக்கலாம்

தற்போது 20 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க போர்ட்போலியோவுக்காக கூடுதல் வணிகமானது, 45 ஜிகாவாட் 1 லட்சம் ஹெக்டேட் பரப்பளவில் 45 ஜிகாவாட் கலப்பின புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி மூலம் மேம்படுத்தப்படும். இது சிங்கப்பூரை விட 1.4 மடங்கு அதிகம் எனலாம்.

மெகா திட்டம்
 

மெகா திட்டம்

புதிய வணிகமானது 3 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஆற்றலை வணிகமயமாக்க, இது வழிவகுக்கும் என்று அதானி குழுமத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதோடு இந்தியாவில் 3 கிகா தொழிற்சாலைகள் கட்டவும் திட்டமிட்டுள்ளது. இது தவிர இன்னும் பல சோலார் என பல வகையான திட்டங்களை கொண்டுள்ளது.

எங்களது இலக்கு இது தான்

எங்களது இலக்கு இது தான்

இதற்கிடையில் இந்தியாவில் இருந்து புதைவடிவ எரிபொருளை முழுமையாக அகற்ற முடியாது என்பதையும் ஒப்புக் கொண்ட அதானி, எனினும் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு எங்களது இலக்கு இருக்கும். உலக மக்கள் தொகையில் இந்தியா 16% வகித்தாலும், CO2 உமிழ்வில் 7% தான் உள்ளது என்பதையும் விளக்கமளித்துள்ளார்.

டிஜிட்டல் பரிமாற்றம்

டிஜிட்டல் பரிமாற்றம்

இது மட்டும் அல்ல டிஜிட்டல் பரிமாற்றம் பற்றி பேசியவர், இந்திய டேட்டா சென்டர் மிகப்பெரிய வளர்ச்சியினை காணும் என கூறியுள்ளார். பசுமை தரவு மையங்களை உருவாக்குவது கேம் சேஞ்சராக இருக்கும் என கூறினார்.

வாய்ப்புகள் நிறைந்த நாடு

வாய்ப்புகள் நிறைந்த நாடு

இந்தியா நம்ப முடியாத வாய்ப்புகள் நிறைந்த ஒரு நாடு.. இங்கு உண்மையான வளர்ச்சி இப்போது தான் தொடங்குகிறது. ஆக இந்தியாவின் வளர்ச்சி நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பு. இது இந்தியாவின் வளர்ச்சிக்கும் தூண்டுதலாக இருக்கும். இது உலகளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani group plans invest over $100 billion in next 10 years: Gautam Adani

Adani group plans invest over $100 billion in next 10 years: Gautam Adani/அதானியின் பிரம்மாண்ட திட்டம்.. அடுத்த 10 ஆண்டுகளில் $100 பில்லியன் முதலீடு செய்ய திட்டம்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X