ரூ.7 லட்சம் கோடி முதலீடு செய்ய ரெடியாகும் அதானி குழுமம்.. ஓ இதுதான் கணக்கா..!!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமத்தில் ஒன்றான அதானி குழுமம், அடுத்த 10 வருடத்தில் 7 லட்சம் கோடி ரூபாயை இந்திய உள்கட்டமைப்புத் துறையில் செலவழிக்க உள்ளதாகத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் தலைமை நீதிபதி DY சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், அதானி - ஹிண்டன்பெர்க் ரிசர்ச் விவகாரம் குறித்த விசாரணையில் ஒரு சில ஊடக அறிக்கைகளை மட்டும் நம்பி இந்த வழக்கில் செபி அமைப்பின் விசாரணையை நீதிமன்றம் சந்தேகிக்க முடியாது என்று கூறியது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகள பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதில் முக்கியமாக கௌதம் அதானியின் சொத்து மதிப்பு எப்போதும் இல்லாமல் தினசரி அடிப்படையில் உயர்ந்து வரும் வேளையில் உலகின் டாப் 20 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நுழைந்தார்.

ரூ.7 லட்சம் கோடி முதலீடு செய்ய ரெடியாகும் அதானி குழுமம்.. ஓ இதுதான் கணக்கா..!!

அது சரி, அதென்ன 7 லட்சம் கோடி ரூபாய் கணக்கு, அமெரிக்காவின் ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதானி குழுமத்தின் முன்பு வைத்த குற்றச்சாட்டுகள் மூலம் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை அதானி குழுமம் இழந்தது. இதை ஈடுகட்டும் வகையில் இந்க அறிவிப்பு வந்துள்ளது.

அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் எவ்விதமான விரிவான விவரங்களை அளிக்காமல் நாங்கள் அதிக முதலீடு செய்ய விரும்புகிறோம் என்று மட்டும் கூறினார். இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதானி குழுமப் பங்குகள் முக்கிய டார்கெட் ஆக மாறியுள்ளது.

இந்த 7 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு மூலம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை மூலம் ஏற்பட்ட பாதிப்பை மொத்தமாகக் களையும் முயற்சியில் கௌதம் அதானி தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது அறிக்கையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாகப் பங்கு விலை கையாளுதல் மற்றும் கணக்கியல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது. இதை அதானி குழுமம் ஆரம்பம் முதல் கடுமையாக மறுத்து வருகிறது.

ஜூலை மாதம் பங்குதாரர்களிடம் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தின் போது கௌதம் அதானி பேசுகையில், துறைமுகங்கள், எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு வணிகங்கள் ஆகியவற்றில் பெரும் விரிவாக்க இலக்குகளை அறிவித்தார். அதற்கு முன் அவரது குழுமம், பங்குதாரர்களின் நம்பிக்கையை உயர்த்தவும் கடனை செலுத்த முயற்சி செய்ததோடு, தனது வர்த்தகத்திற்கு முக்கியமில்லாத சில சொத்துக்களையும் விற்பனை செய்தது.

மேலும் அதானி குழுமத்தின் உள்கட்டமைப்பு முதலீடுகள் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும். இதோடு அதானி குழுமம் தற்போது அதிகப்படியான தொகையை அண்டை நாட்டு உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+