அதானி குழுமம் எப்படியேனும் இழந்த மரியாதையை, நம்பிக்கையை மீட்டெடுக்கும் விதமாக பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதானி குழுமம் கடன் பிரச்சனையில் இருப்பதாகவும், தற்போது அதனை செலுத்த இயலாத நிலையில் இருப்பதாகவும் பற்பல குற்றச்சாட்டுகள் வலம் வந்து கொண்டுள்ளன. ஆனால் அத்தகைய கருத்துகளை உடைத்தெறியும் விதமாக, ஏற்கனவே கணிசமான தொகையை அதானி குழுமம் முன் கூட்டியே செலுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன் கரன் அதானி 2024-க்குள் அதானி குழுமம், அனைத்து கடன்களையும் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. நடப்பு ஆண்டிற்குள் கணிசமான தொகையை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
எதற்காக கடன்?
இந்த நிலையில் அடுத்த மாதம் அதானி குழுமம் 500 மில்லியன் டாலர் கடனை செலுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் பார்க்லேஸ் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்டர்டு, டாய்ச் வங்கி உள்ளிட்ட வெளி நாட்டு வங்கிகள் அடங்கும். கடந்த ஆண்டு இந்த வெளி நாட்டு வங்கிகள் ஹோல்சிம் சிமெண்ட் நிறுவனத்தினை வாங்க 4.5 பில்லியன் டாலர்களை கடனாக வாங்கியது. இந்த கடனில் ஒரு பகுதி மார்ச் 9ம் தேதி செலுத்த வேண்டிய நிலுவையாக உள்ளது.
அதானி குழுமத்திற்கு அழுத்தம்
அதானி குழுமம் செலுத்த வேண்டிய கடனில் 1.1 பில்லியன் டாலர் கடனில், 500 மில்லியனுக்கும் அதிகமான தொகையினை செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிகிறது. இதில் முழுத் தொகையையும் திருப்பி செலுத்தும் படி, அதானி குழுமத்திற்கு அழுத்தம் இருப்பதாகவும் தெரிகிறது.
அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கை
இது அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது வந்த பிறகு, அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கை என்பது சற்றே குறைந்துள்ளது எனலாம். இது முதலீட்டாளர்கள் மத்தியில் அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை பதம் பார்த்துள்ளது எனலாம். இதற்கிடையில் தான் அதானி குழும பங்குகள் கடந்த 2 இரண்டு நாட்களாக சற்றே மேன்மடைய தொடங்கியுள்ளது.
முன் கூட்டியே நடவடிக்கை
அதானி குழுமத்தின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தற்போது சற்றே அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இதனை இன்னும் அதிகரிக்கும் விதமாகவும், தக்க வைத்துக் கொள்ளும் விதமாகவும் அதானி குழுமம் பல திட்டங்களை தீட்டி வருகின்றது. செலுத்த வேண்டிய கடனை சரியான நேரத்தில் செலுத்தவும் முன் கூட்டியே நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அடுத்த ஆண்டு திட்டம்
குறிப்பாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக கடனை முன்கூட்டியே செலுத்த தொடங்கியுள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் கடன் 5,000 கோடி ரூபாயினை, அடுத்த நிதியாண்டில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கரன் அதானியின் அறிவிப்பு
அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கரன் அதானி, 2024ம் நிதியாண்டில் அதன் எபிட்டா இலக்கினை 14,500 - 15000 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மூலதன செலவு கடன் 4000 - 4500 ரூபாய் தவிர, மொத்த கடனை திருப்பிச் செலுத்துதல், சுமார் 5000 கோடி ரூபாய் கடனை முன் கூட்டியே செலுத்தவும் பரிசீலித்து வருவதாகவும் கூறியிருந்தார். இது மேலும் அதானி குழும பங்குகளை ஊக்குவிக்கும் விதமாக வந்துள்ளது. இது இனி வரவிருக்கும் நாளிலும் அதானி குழும பங்குகள் ஏற்றம் காண வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications