சமீபத்திய ஆண்டுகளாக அதானி என்ன வணிகத்தினை செய்கிறார் என்பதை காட்டிலும், என்ன வணிகத்தினை அவர் செய்யவில்லை என்ற கேள்விக்கு பதில் கூற முடியாத அளவுக்கு ஒவ்வொரு துறையாக பார்த்து பார்த்து முதலீடு செய்து வரும் அதானி குழுமம், ரியல் எஸ்டேட் துறையிலும் தன்னுடையை முத்திரையை ஏற்கனவே பதித்துள்ளது.
தற்போது ரியல் எஸ்டேட் துறையிலான தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அதானி குழுமம் களமிறங்கியுள்ளது.
விரிவாக்கம் செய்ய திட்டம்
பொதுவாக எந்தவொரு வணிகத்திலும் மாஸாக களமிறங்கும் அதானி, தற்போது ரியல் எஸ்டேட் துறையிலும் அப்படித் தான் களமிறங்கியுள்ளார். சொல்லப்போனால் இந்த முறை கொஞ்சம் அதிகளவு ரிஸ்க் எடுக்கவே தயாராகி விட்டார் எனலாம். ஏனெனில் திவாலான ஒரு நிறுவனத்தினை வாங்கி, அதன் மூலம் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதானி குழுமத்தின் திட்டம்
தகவல்கள் படி, அதானி குழுமத்தின் அதானி குட்ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், திவால் நிலையில் உள்ள ரேடியஸ் எஸ்டேட் அண்ட் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை வாங்குவதற்கான பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த பேச்சு வார்த்தையில் விரைவில் சுமூக நிலை எட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
திவால் நிறுவனத்தை வாங்க திட்டம்
இதில் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவெனில் திவாலாகிவிட்ட ரேடியஸ் நிறுவனத்தினை 98% தள்ளுபடியில் வாங்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த ஒப்பந்தத்திற்காக அதானி குழுமம் 319.7 மில்லியன் ரூபாய் (4 மில்லியன் டாலர் ) செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எனினும் ரேடியஸ் நிறுவனம் தரப்பில் 16.58 பில்லியன் ரூபாய் மற்றும் 15.2 மில்லியன் ரூபாய் ஊழியர்களும் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தான் திட்டம்
பில்லியனர் கெளதம் அதானி ரேடியஸ் நிறுவனத்தினை வெற்றிகரமாக கையகப்படுத்தி, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஜுன் 24-க்குள் 8 பில்லியன் ரூபாய் மதிப்பிலான 700 சொகுசு அபார்ட்மெண்ட்களை வழங்கும் என்றும் கூறப்படுகின்றது.
நீதி மன்றத்தில் வழக்கு
அதானியின் இந்த ஏல நடவடிக்கைக்காக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயமும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிகின்றது.
இந்த ஏல நடைமுறையில் கடந்த ஆண்டு சில முறைகேடுகள் நடந்ததாகவும், இது குறித்தான வழக்கானது இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் இறுதி தீர்ப்பு குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
விரைவில் அறிவிப்பு வரலாம்
விரைவில் இது குறித்தான அறிவிப்பானது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. துறைமுகம், விமான துறை, நிலக்கரி, மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில்களில் வெற்றி கண்டுள்ள அதானிக்கு, இந்த திவால் நிலையில் உள்ள நிறுவனத்தினை மேற்கொண்டு வருவது என்பதில் பெரிய சிரமம் இருக்காது. அதிலும் சந்தை விலையில் இருந்து தள்ளுபடி விலையில் கிடைத்திருப்பது, அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கு இன்னும் துணை புரியும் தானே. எனினும் இது குறித்தான முழுமையான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்போது தான் உண்மை என்ன என்பது முழுமையாக தெரியவரும்..
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications