அதானி குழுமம் கடந்த 5 வருடத்தில் பதிவு செய்த மாபெரும் வளர்ச்சியில் டாடா குழுமத்தை கட்டிலும் அதிக மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்திருந்தது. ஆனால் ஜனவரி மாதம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் மூலம் மொத்தமும் தலைகீழாக மாறியது.
ஹிண்டன்பர்க் சம்பவத்திற்கு பின்பு அதானி குழுமம் மிகப்பெரிய நிதி தொகையை கடனாக திரட்டும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமம் புதிய கிரீன் எனர்ஜி திட்டங்களுக்கு 1 முதல் 1.5 பில்லியன் டாலர் வரையிலான தொகையை நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது.

ஹிண்டன்பர்க் சம்பவத்திற்கு பின்பு நடக்கும் முக்கியமான முதலீட்டு திரட்டும் பணியை அதானி குழுமம் மேற்கொண்டு உள்ள நிலையில் முதலீட்டாளர்களின் கவனம் இதன் மீது திரும்பியுள்ளது. இந்த திட்டத்தில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள படி 1 முதல் 1.5 பில்லியன் டாலர் வரையிலான தொகையை நிதி திரட்டிவிட்டால் அதானி குழுமத்திற்கு ஏறுமுகம் தான்.
அதானி குழுமம் கடந்த ஒரு மாதத்தில் முதலீட்டை ஈர்பதற்காக அமெரிக்கா, சிங்கப்பூர், சமீபத்தில் 2 நாள் ஹாங்காங் ஆகிய நகரங்களில் முக்கிய முதலீட்டாளர்களுடன் முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தியது.

சிங்கப்பூர் கூட்டத்தில் அதானி குழுமம் சுமார் 12 சர்வதேச வங்கிகளின் உதவியை நாடியது, இதில் BNP பரிபாஸ், DBS வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, Deutsche Bank, ING, Mitsubishi UFJ நிதிக் குழு மற்றும் Mizhuo ஆகியவை அடங்கும். இதுக்குறித்து அதானி குழுமம் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
உலக நாடுகளில் வங்கிகளும் முதலீட்டு நிறுவனங்களும் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது அதானி குழுமம் ஹிண்டன்பர்க் வைத்த குற்றச்சாட்டுகளை தாண்டி 1 முதல் 1.5 பில்லியன் டாலர் வரையிலான தொகையை நிதி திரட்ட முடியுமான என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications