அதானி குழுமம் ஹிண்டன்பர்க் தாக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தாலும் சமீபத்தில் தி கென் வெளியிட்ட அறிக்கை மூலம் அடுத்த சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளது. அதானி குழுமம் மீண்டும் சந்தையில் வெற்றி வாகைசூடி முதலீட்டாளர்களின் நம்பிக்கை பெற வேண்டும் என்றால் பிரபலமான முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளை பெறுவது தான்.
இதேவேளையில் அதானி குழுமத்திற்கும் அதன் வர்த்தகத்தை மேம்படுத்த, விரிவாக்கம் செய்ய, கடனை தீர்க்க என பல விஷயங்களுக்கு அதிகப்படியான நிதி தேவை உள்ளது. GQG பார்ட்னர்ஸ் அதானி குழுமத்தில் 15000 கோடி ரூபாய் சமீபத்தில் முதலீடு செய்தது. அடுத்த ரவுண்டு முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கும் வேளையில் இதற்கான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் அதானி குரூப் உயர்மட்ட நிர்வாகிகள் அமெரிக்காவில் முன்னணி முதலீட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து வருகின்றனர். எதற்காக இந்த திடீர் சந்திப்பு..?
அதானி குழுமம்
அதானி குழுமம் தனது நிதி நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முக்கியமான சில நிறுவனங்களின் பெயரில் பத்திரங்களை பொது சந்தையில் அல்லாமல் தனிப்பட்ட முறையில் வெளியிட்டு முதலீட்டை திரட்ட முடிவு செய்துள்ளது.
பிளாக்ராக், பிளாக்ஸ்டோன்
இதற்காக அதானி குரூப் உயர்மட்ட நிர்வாகிகள் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களான பிளாக்ராக், பிளாக்ஸ்டோன், பிசிபிக் இன்வெஸ்ட்மென்ட், மேனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களை இந்த ப்ரைவேட் பாண்ட் முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தும், அதற்கான பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளது.
ப்ரைவேட் பாண்ட்
இந்த முக்கியமான ப்ரைவேட் பாண்ட் முதலீட்டு திட்டத்தின் மூலம் 2 பகுதிகளாக 1 பில்லியன் டாலர் வரையிலான தொகையை திரட்ட இந்த வருடம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதானி குழுமமோ, பிளாக்ராக், பிளாக்ஸ்டோன், பிசிபிக் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனங்களோ எவ்விதமான தகவலையும் வெளியிடவில்லை.
இன்வெஸ்டார் ரோடுஷோ
அதானி குழுமம் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ ஆகிய பகுதிகளில் இன்வெஸ்டார் ரோடுஷோ நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான் தற்போது அதானி குரூப் உயர்மட்ட நிர்வாகிகள் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களான பிளாக்ராக், பிளாக்ஸ்டோன், பிசிபிக் இன்வெஸ்ட்மென்ட், மேனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து வருகின்றனர்.
153 பில்லியன் டாலர்
அதானி குழுமம் ஹிண்டன்பர்க் தாக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தாலும் சமீபத்தில் தி கென் வெளியிட்ட அறிக்கை மூலம் அடுத்த சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின்பு அதானி குழுமம் சுமார் 153 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.


Click it and Unblock the Notifications