கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட பின்பு பெரிய அளவிலான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நடந்து வருகிறது. ஒருபக்கம் நிதியியல் சேவை பிரிவை விற்பனை செய்தாலும், மறுமுனையில் புதிதாக ஒரு சிமெண்ட் நிறுவனத்தை வாங்கியது.
இந்த நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், வில்மர் இன்டர்நேஷனல் லிமிடெட் கூட்டணியில் உருவாகிய இந்திய நுகர்வோர் சந்தையில் பெரும் ஆதிக்கத்தை கொண்டிருக்கும் அதானி வில்மார் நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியிலும் அதற்கான சந்தை நிலவர ஆய்வு பணிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகம் அதானி வில்மார் லிமிடெட் நிறுவனத்தில் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் 44% பங்குகளை விற்பனை செய்ய பரிசீலித்து வருகிறது. ப்ளூம்பெர்க் கணக்கீடு படி, மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள அதானி வில்மார் நிறுவனத்தில் அதானி குழுமம் வைத்துள்ள பங்குகளிணன் மதிப்பு சுமார் 2.7 பில்லியன் டாலர் மதிப்புடையதாகும்.
கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பம் அதானி வில்மார் நிறுவனத்தில் இருக்கும் 44 சதவீத பங்குகளையும் விற்க வாய்ப்புள்ளது, அல்லது சிறிய அளவிலான பங்குளை மட்டும் வைத்துக் கொண்டு பெருமளவு பங்குகளை விற்கவும் வாய்ப்புகள் உள்ளது எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
1991 இல் சிங்கப்பூரை சேர்ந்த் கோடீஸ்வரரான குவோக் கூன் ஹாங் (Kuok Khoon Hong) நிறுவிய முன்னணி உணவுப் பொருட்கள் நிறுவனம் தான் இந்த வில்மார், இந்தியாவில் தனது சமையல் எண்ணெய் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு Wilmar, அதானி குழுமத்துடன் இணைந்து அதானி வில்மார் 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2022 ஐபிஓ வெளியிடப்பட்டு 3600 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
அதானி வில்மார் பங்குகளை விற்பனை செய்யும் திட்டம் ஆரம்பக்கட்டத்தில் மட்டும் உள்ளது, இந்த முடிவில் இருந்து அதானி குழுமம் பின்வாங்கவும் வாய்ப்புகள் உள்ளது. அதானி வில்மார் பங்குகள் இந்த ஆண்டு மட்டும் சுமார் 36% சரிந்துள்ளது, மேலும் அதானி நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 6.2 பில்லியன் டாலராக உள்ளது.
அதானி வில்மார் தற்போது FMCG பிரிவில் சமையல் எண்ணெய், கோதுமை மாவு, பருப்பு வகைகள், சர்க்கரை போன்ற பொருட்களை நாடு முழுவதும் விற்கிறது. அதானி வில்மார் மூலம் அதானி குழுமம் நேரடி ரீடைல் வர்த்தகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications