அதானி குழுமத்தின் முக்கிய திட்டம்.. $1114 மில்லியன் மதிப்பிலான கடனை முன்கூட்டியே செலுத்த திட்டம்!

உலகினியே ஒரு காலகட்டத்தில் தன் பக்கம் திரும்ப பார்க்க வைத்த அதானி குழுமம், ஒரே வாரத்தில், ஒரே ஒரு ஒற்றை அறிவிப்பால், அஸ்திவாரமே ஆட்டம் கண்டது எனலாம். அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பானது ஒரே வாரத்தில் பாதியாக குறைந்துள்ளது.

இத்தோடு ஆட்டம் நின்று விட்டதா எனில் நிச்சயம் இல்லை. தொடர்ந்து அடுத்தடுத்த அடியாக அதானி குழுமம் கண்டு கொண்டுள்ளது. அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டு வருகின்றன. இது ஒரு தொடர் நிகழ்வாக இருந்து வருகின்றது.

ஆரம்பத்தில் ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு எதிராக குரல் கொடுத்த அதானி, பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக தகவல்கள் வெளியானது. மேலும் ஹிண்டர்ன்பர்க்கின் இந்த குற்றச்சாட்டானது ஆதாரமற்றது என குற்றம் சாட்டியது.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

ஆனால் அடுக்கடுக்காய் சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு மத்தியில் அதானி குழுமத்தின் மீது செபி முதல் ரிசர்வ் வங்கி வரையிலும் ஆராயத் தொடங்கி விட்டன. அதேபோல சர்வதேச கிரெடிட் நிறுவனங்களும் அதானி பங்குகளை பிணையமாக எடுத்து கொள்ள முடியாது என ஒரே போடாய் போட்டுவிட்டன. ஆக இன்று வரையில் செய்வதறியாது திகைக்கும் அதானி, எப்படி இப்பிரச்சனையை சமாளிப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதை இந்த பதிவின் மூலம் அறிய முடிகிறது.

அதானியின் முக்கிய திட்டம்

அதானியின் முக்கிய திட்டம்

அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, அதானி குழுமம் பங்குகளுக்கு எதிராக வாங்கிய 7000 - 8000 கோடி ரூபாய் கடனை முன் கூட்டியே கட்ட திட்டமிட்டுருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது அதானி குழும நிறுவனங்கள் தற்போதைய லெவலில் எந்த நிறுவனமும் கடனை திரும்ப செலுத்தும் நிலையில் இல்லை என ஹிண்டர்ன்பர்க் குற்றம்சாட்டிய நிலையில் வந்துள்ளது.

இது நம்பிக்கையை அதிகப்படுத்தலாம்

இது நம்பிக்கையை அதிகப்படுத்தலாம்

ஆனால் தனது போர்ட்போலியோவுக்கு எதிரான கடன்களை முன் கூட்டியே செலுத்த விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வரும் அச்சத்தினை போக்கவும், அதானி குழுமத்தின் மீதான குறைந்த நம்பிக்கையை மீட்டெடுக்கவும், இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அதானி குழுமம் நம்புவதாகவும் தெரிகிறது.

அதானியின் செம திட்டம்

அதானியின் செம திட்டம்

இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இது குறித்தான அறிவிப்பு திங்கட்கிழமை வரலாம் என்றும் தெரிகிறது. இது பங்குகளுக்கு எதிரான கடன்களை முழுமையாக திரும்ப செலுத்த திட்டமிடுவதாகவும் தெரிகிறது. இதனை அடுத்த 30 - 45 நாட்களில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பங்குகளை திரும்ப பெற திட்டமா?

பங்குகளை திரும்ப பெற திட்டமா?

முன்னதான ETயில் வெளியான அறிக்கை ஒன்றில் இரண்டு அதானி நிறுவனங்களின் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது.

இதில் அதானி போட்ஸ் & செஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட் உள்ளிட்ட இரு நிறுவனங்களும் அடங்கும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில்லை

அதிகாரப்பூர்வ அறிவிப்பில்லை

எனினும் பங்கு சந்தைக்கு இது குறித்து இதுவரையில் எந்த தகவலும் தாக்கல் செய்யப்படவில்லை. ஏற்கனவே அதானி குழுமத்தின் புரோமோட்டர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்திருக்கலாம். எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் போது முழுமையான விவரங்கள் தெரிய வரலாம்.

இவ்வளவு கடனா?

இவ்வளவு கடனா?

இதில் அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மற்றும் துணை நிறுவனங்கள் அதன் பங்குகளை பிணையமாக வைத்து, 11,574 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை எடுத்துள்ளது. ஆக இதனை திரும்ப செலுத்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கோரிக்கை விடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எதற்காக இப்படி ஒரு முடிவு?

எதற்காக இப்படி ஒரு முடிவு?

இந்த முடிவானது ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையானது வெளியான நிலையில், சரிந்து போன தங்களது நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும், மீட்டெடுக்கவும் நிறுவனம் இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என தெரிகிறது. எனினும் இது குறித்து நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடவில்லை. இப்படி ஒரு நிகழ்வு நடக்கும்பட்சத்தில் சரிந்த அதானி குழும பங்குகள் சற்றே மீளுவதற்கான வாய்ப்பும் கிடைக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+