அதானி குழுமம் கடனை அடைக்கவில்லையா..? அதானி குழும தலைமை நிதித் தலைவர் (CFO) விமர்சனங்களுக்கு பதலடி கொடுத்துள்ளார்.
அதானி நிறுவனம் கடன்களை முழுமையாகத் திரும்பி செலுத்தியதாக கூறிய நிலையில், இன்னும் முழுமையாக அடைக்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகி அதானிக்கு புது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தான் அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் ராபி சிங் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதானி செலுத்திய கடன்!
பங்குச் சந்தையில் அனைத்து அதானி நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், அதானி குழுமம் கடன்களை அடைத்துவிட்டதாக சொன்னாலும், இன்னும் கடன்களை முழுமையாக அடைக்கவில்லை என 'தி கென்' (The Ken) நிறுவனம் வெளியிட்ட அறிக்கைதான் காரணம்.
கடன்கள் அடைப்பு!
அதானிக் குழுமம் கடந்த ஜனவரி மாதம் தனது பங்குகளை அடமானம் வைத்து பெற்ற 2.15 பில்லியன் டாலர் கடனை அடைத்துவிட்டதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அதானி குழுமம் முயற்சித்து வரும் நிலையில், கடன்களை அடைத்துவிட்டதாக பொய்யான அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
நிதித் தலைவர்
இது குறித்து அதானிக் குழுமத்தின் நிதித் தலைவர் ஜுகேஷிந்தர் ராபி சிங் அவரின் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அடுத்த காலாண்டு முடிவுகள் வெளியாகும்போது, இதெல்லாம் வேண்டுமென்றே செய்யப்படும் சூழ்ச்சி என்பதை அனைவரும் அறிவார்கள் என பதிவிட்டுள்ளார்.
தி கென் நிறுவனம் அறிக்கை!
அதானி முழுமையாக கடன்களை அடைக்கவில்லை என கென் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. ஏனெனில், கடன்களுக்காக அடமானம் வைக்கப்பட்ட அதானி நிறுவனங்களின் புரமோட்டர் பங்குகளை இன்னும் வங்கிகள் முழுமையாக விடுவிக்கவில்லை.
50 சதவீத கடன்
அதானி குழுமம் பங்குகளை அடமானமாக வைத்து வாங்கிய கடன்களில் பாதியை மட்டுமே அடைத்துள்ளதாகவும், அதனால் இன்னும் புரமோட்டர் பங்குகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை எனவும் கென் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை அதானி அடைத்த கடன்களுக்காக அதானி போர்ட்ஸ் பங்குகள் மட்டுமே வங்கிகளால் விடுவிக்கப்பட்டுள்ளன எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்படாத நிறுவனங்கள்!
இன்னும் அதானிக் குழுமத்தின் அதானி கிரீன் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகள் வங்கிகளால் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன. வழக்கமாக, கடன்களை அடைத்த பின் பங்குகளை வங்கிகள் உடனடியாக விடுவித்துவிடுவார்கள். ஆனால், அதானி விவகாரத்தில் இன்னும் பங்குகளை வங்கிகள் விடுவிக்காததால், அதானி இன்னும் முழுமையாக கடன்களை அடைக்கவில்லை என கென் அறிக்கை கூறுகிறது.
பங்குச் சந்தை எதிரொலி!
இந்த தி கென் அறிக்கை வெளியானதை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. அதிலும் பங்குச் சந்தையில் பட்டியலிட்டப்பட்ட 10 அதானிக் குழுமப் பங்குகளும் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சரிவை சந்தித்தது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமம் சுமார் 135 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்துள்ளன.
NSE மற்றும் BSE கேள்வி!
இந்நிலையில், அதானி குழுமம் இன்னும் கடன்களை முழுமையாக அடைக்கவில்லை என வெளியாகியுள்ள தகவல் குறித்து அதானி குழுமத்திடம் தேசிய பங்குச் சந்தையும் (NSE), மும்பை பங்குச் சந்தையும் (BSE) விளக்கம் கேட்டுள்ளன.


Click it and Unblock the Notifications