சீனர் Chang Chung Ling உடன் என்ன தொடர்பு.. ஹிண்டன்பர்க் கேள்விக்கு பதில் அளிக்காத அதானி குழுமம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி குழுமத்தை புரட்டிப்போட்டது மட்டும் அல்லாமல் பெரும் முதலீட்டு நிறுவனங்கள், ரீடைல் முதலீட்டாளர்கள் என அதானி குழுமத்தில் நேரடியாக மற்றும் மறைமுகமாக முதலீடு செய்துள்ள அனைத்து தரப்பினரும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை பயத்தைக் காட்டியுள்ளது.

Recommended Video

Adani VS Hindenburg | US-ல் நடந்த Balloon விபத்திற்கும்...Adani Shares சரிவிற்கும் என்ன தொடர்பு?

ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஜனவரி 24 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை முதலீட்டுச் சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று அதானி குழுமம் 413 பக்க அறிக்கையை வெளியிட்டது.

இதில் முக்கியமான கேள்விக்கு அதானி குழுமம் பதில் அளிக்கவில்லை என ஹிண்டன்பர்க் ரிசர்ச் நேற்று வெளியிட்ட பதில் அறிக்கையில் அதானி குழுமத்தை கட்டம் கட்டி அடித்துள்ளது.

கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..? கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஜனவரி 24 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலேயே அதானி குழுமத்திற்கும் சீன நாட்டவரான Chang Chung-Ling உடன் என்ன தொடர்பு என்ற கேள்வியை முன்வைத்தது. இந்தக் கேள்வியை முன்வைக்க மிக முக்கியமான காரணம் Chang Chung-Ling தொடர்புடைய நிறுவனங்கள் பல அதானி குழுமத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறது.

சீன நாட்டவர் Chang Chung-Ling

சீன நாட்டவர் Chang Chung-Ling

சீன நாட்டவரான Chang Chung-Ling உடன் அதானி குழுமத்திற்கும், கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கு அதானி குழுமத்தின் 413 பக்க அறிக்கையில் ஒரு வரியில் கூடப் பதில் அளிக்கவில்லை.

இந்திய தேசிய நலன்

இந்திய தேசிய நலன்

இதைத் தொடர்ந்து ஜனவரி 29 ஆம் தேதி இரவு வெளியிட்ட அதானி குழுமத்தின் 413 பக்க அறிக்கைக்கான பதிலில் அதானி குழுமம் சீன நாட்டவரான Chang Chung-Ling உடனான தொடர்பு குறித்த விபரம் பங்குமுதலீட்டாலர்களுக்கு மட்டும் அல்லாமல் இந்தியாவின் தேசிய நலனுக்கும் முக்கியம் என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்

சீன நாட்டவரான Chang Chung-Ling ( இவரை Lingo Chang எனவும் அழைக்கப்படுவார்) நடத்தும் Gudami International என்ற நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் தற்போது நடந்து வரும் லஞ்ச ஊழல் விசாரணையில் ஒன்றான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில் பெரும் பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

PMC PROJECTS நிறுவனம்

PMC PROJECTS நிறுவனம்


இதேபோல் அதானி குழுமத்தின் மிகப்பெரிய கான்டிராக்டர் நிறுவனமான PMC PROJECTS என்னும் நிறுவனத்தின் லாபம் அடைவது சீன நாட்டவரான Chang Chung-Ling-ன் மகன் என்பது முக்கியமான விஷயமாக உள்ளது.

6300 கோடி ரூபாய்

6300 கோடி ரூபாய்

கடந்த 12 வருடத்தில் PMC PROJECTS என்னும் தனியார் கான்டிராக்ட் நிறுவனத்திற்கு அதானி குழும நிறுவனங்கள் சுமார் 6300 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தை வினோத் அதானியின் நெருக்கிய கூட்டாணியான Chang Chung-Ling-ன் மகன் நடத்தி வருவதாகவும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

Chang Chung-Ling-ன் மகன்

Chang Chung-Ling-ன் மகன்

இதேபோல் Chang Chung-Ling-ன் மகன் அதானி குரூப்-ன் தைவான் பிரதிநிதியாகவும், தைவான் நிறுவனத்தில் மிகப்பெரிய பங்கு இருப்பை வைத்துள்ளதாகத் தைவான் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு உள்ளதை ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

ஆவணங்கள் இல்லை

ஆவணங்கள் இல்லை

PMC PROJECTS கட்டுப்பாட்டாளர், தெளிவாக அதானி குழுமத்தின் பிரதிநிதியாக இருந்தபோதிலும், இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இருந்து 6300 கோடி ரூபாய் அளவிலான பணத்தை வெளியேற்றிய PMC PROJECTS-க்குச் செலுத்தப்பட்டது குறித்த ஆவணங்கள் இல்லை என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

6300 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம்

6300 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம்

இந்த நிலையில் அதானி குழுமத்தின் நேற்றைய பதில் சீன நாட்டவரான Chang Chung-Ling உடனான தொடர்பு குறித்தும், PMC PROJECTS நிறுவனங்களுக்கு 12 வருடத்தில் அளிக்கப்பட்ட 6300 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது ஹிண்டன்பர்க் ரிசர்ச்.

30 பக்கம் மட்டுமே பதில்

30 பக்கம் மட்டுமே பதில்

மேலும் அதானி குழுமத்தின் 413 பக்க நீண்ட நெடு அறிக்கையில் 30 பக்கம் மட்டுமே ஹிண்டன்பர்க் ரிசர்ச்-ன் 88 கேள்விக்கான பதிலாகும். அதிலும் முக்கியமாக 62 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்துள்ளது அதானி குழுமம்.

26 கேள்விகளுக்குப் பதில் இல்லை

26 கேள்விகளுக்குப் பதில் இல்லை

எஞ்சியுள்ள 330 பக்கம் நீதிமன்ற ஆதாரங்கள், நிதி முடிவுகள் போன்றவை தான். இது தற்போதைய நிலையில் தேவையற்ற ஒன்று என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் மீதமுள்ள 26 கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் உள்ளது. இதில் முக்கியமான கேள்வி தான் சீனரான Chang Chung-Ling கேள்வி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Group relationship with Chinese citizen Chang Chung-Ling; Connection of PMC Projects hindenburg questions

Adani Group relationship with Chinese citizen Chang Chung-Ling; Connection with PMC Projects hindenburg question
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X