இந்தியாவின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி நிர்வாகம் செய்யும் அதானி குழுமம் வியாழக்கிழமை செலுத்த வேண்டியிருந்த 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பிரிட்ஜ் கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 500 மில்லியன் டாலர் தொகையை செவ்வாய்க்கிழமையே செலுத்தியுள்ளது மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் கூடுதல் நம்பிக்கையை பெற முடியும் என அதானி குழுமம் நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
500 மில்லியன் டாலர் மதிப்பிலான பிரிட்ஜ் கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளது குறித்து அதானி குழுமம் எவ்விதமான அதிகாரப்பூரவ் அறிவிப்பை வெளியிடவில்லை. மேலும் அதானி குழுமம் முதலீட்டுகளை திரட்ட வெளிநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்கள் மத்தியில் ரோடுஷோ நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
வதந்தி
அதானி குழுமம் சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நடைபெற்ற முதலீட்டு ரோடுஷோ மூலம் அரபு நாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து 3 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை பெற்றதாக தகவல் வெளியானது, இது வதந்தி என பின்பு அதானி குழுமம் விளக்கம் கொடுத்தது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த நிலையில் வியாழக்கிழமை செலுத்த வேண்டிய 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பிரிட்ஜ் கடனைத் கடன் வழங்குபவர்களுக்கு செவ்வாய்க்கிழமையே பணம் விடுவிக்கப்பட்டதாக வெளிவரும் தகவல்கள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போதை காலக்கட்டத்தில் மிகவும் அவசியமாக உள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
ஜனவரி பிற்பகுதியில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து சில வங்கிகள் அதானி குழுமத்திற்கான கடனை மறுநிதியளிப்பதில் பின்வாங்கின, இது அதானி குழும பங்குகளின் மதிப்பை பெரிய அளவில் பாதித்தது.
கடன் குறைப்பு
கௌதம் அதானி நிர்வாகம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கைக்கு பின்பு சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் அடிப்படையிலான கடன்களை முன்கூட்டியே செலுத்தி பங்குகளை பெற்றுள்ளது. இதேபோல் முதிர்வடையும் சில பத்திரங்களுக்கான பணத்தையும் திருப்பிச் செலுத்தியது.
GQG பார்ட்னர்ஸ்
இதன் வாயிலாக தான் ஆஸ்திரேலிய நாட்டின் GQG பார்ட்னர்ஸ் ராஜீவ் ஜெயின் மூலம் அதானி குழுமத்திற்கு ஜனவரி 24க்கு பின் முதல் முறையாக 1.9 பில்லியன் டாலர் முதலீட்டை பெற்றது. இந்த ஒரு முதலீட்டின் மூலம் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 124 பில்லியன் டாலரில் இருந்து 153 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
Holcim நிறுவனம்
சர்வதேச வங்கிகள் கடந்த ஆண்டு Holcim நிறுவனத்தின் கட்டிப்பாட்டில் இருந்த அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனத்தை வாங்குவதற்கு அதானி குழுமத்திற்க்கு சுமார் 4.5 பில்லியன் கடன் கொடுத்தன.
மார்ச் 9 ஆம் தேதி கடன் தவணை
இந்த கடனின் ஒரு பகுதி மார்ச் 9 ஆம் தேதி அதானி குழுமம் செலுத்த வேண்டும், தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி இந்த 4.5 பில்லியன் டாலர் கடனின் தவணையை தான் அதானி குழுமம் செலுத்தியிருக்க வேண்டும். இக்கடனின் அடுத்த தவணை 2024 இல் செலுத்தப்பட வேண்டும்.
அதானி குழும பங்குகள்
அதானி எண்டர்பிரைசஸ் - 2.86 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 3.22 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 4.97 சதவீதம் உயர்வு
அதானி டிரான்ஸ்மிஷன் - 4.99 சதவீதம் உயர்வு
அதானி கிரீன் எனர்ஜி - 5.00 சதவீதம் உயர்வு
அதானி டோட்டல் கேஸ் - 4.99 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 5.00 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 1.17 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 1.69 சதவீத உயர்வு
NDTV - 4.94 சதவீதம் உயர்வு


Click it and Unblock the Notifications