உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற இடத்தில் இருந்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் கெளதம் அதானி, ஒரு அறிக்கைக்கு பின்னர் 21வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இது அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையானது வெளியான நிலையில், அதானி குழும பங்குகள் தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது.
கடந்த வாரம் இந்த அறிக்கையானது வெளியான நிலையில், தற்போது அதானி குழுமத்தின் சந்தை மதிப்பானது பாதியாக குறைந்துள்ளது. முதலீட்டாளர்களின் சொத்தினை வாரிச் சுருட்டி சென்றுள்ளது.
இந்தியா மோசமான சரிவு
இது அதானி குழும பங்குகள் சரிவு என்பதோடு மட்டும் இந்திய சந்தையினையும் பதம் பார்த்துள்ளது எனலாம். இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் மிக மோசமானதாக இருந்தது. தாய்வானுக்கு அடுத்ததாக இந்திய சந்தையானது கடந்த வாரம் மோசமான சரிவினைக் கண்டது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
யார் பெஸ்ட்?
ஜனவரி மாத இறுதியில் தாய்வான் சந்தையானது (MSCI) 14.2% ஏற்றத்திலும் , இதே சீனாவின் சந்தையானது 31.2% ஏற்றத்திலும் காணப்பட்டது. ஆனால் மற்றொரு வளர்ந்து வரும் சந்தைகளில் முக்கிய சந்தையான இந்தியாவின் சந்தையானது 13% சரிவில் காணப்பட்டது. இந்த ஆண்டில் இந்தியா இதுவரையில் 4.2% சரிவினைக் கண்டுள்ளது.
எதிர்கால வளர்ச்சி குறித்த கவலை
அதானி குழும பங்குகளில் ஏற்பட்ட சரிவால், இது இந்திய சந்தையில் முதலீடுகளை குறைத்துள்ளது . இது தொடர்ந்து இந்திய சந்தையில் தங்களது இருப்பினை குறைக்கவும் வழிவகுத்துள்ளது எனலாம். அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது. அதானி குழுமத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்தான கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
முதலீடுகள் குறையலாம்
குறிப்பாக சிறந்த எதிர்கால திட்டமாக இருக்கும் பசுமை ஆற்றலில் முதலீடுகளை குறைக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதானி குழுமம் புதுபிக்கதக்க ஆற்றல் துறையில் 70 பில்லியன் டாலர் முதலீட்டினை செய்வதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடு குறித்தும் பெரும் கேள்வி எழுந்துள்ளது எனலாம்.
அதானி குழும நிலவரம்
அதானி குழுமத்தின் மீதான இந்த குற்றச்சாட்டுகள், இந்திய சந்தையின் மீதான நம்பிக்கையை சேதப்படுத்தும். அதானி குழும பங்குகள் -பங்கு சந்தைகளில் 6% அதிகமான பங்கினை கொண்டிருந்தன. இது தற்போது 3% ஆக இருந்தது. அதானி குழுமத்தின் இந்த வீழ்ச்சி, உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கலாம் என்ற நம்பிக்கையை இந்தியா மேலும் சிக்கலாம் என்று கூறியது.
நம்பிக்கை குறையலாம்
அதானி குழும பங்குகளின் கடும் வீழ்ச்சியினால் இந்தியாவின் நிதி அமைப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இந்தியாவின் பல பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் மற்றும் பங்கு நிதிக்காக, சர்வதேச நிதி நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் நம்பியுள்ளனர். ஆக அந்த நம்பிக்கையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கோடக் வங்கியின் உதய் கோடக் கூறியுள்ளார்.
சாதாரண செயல்முறை தான்
அதானி குழுமத்தில் ஏற்பட்ட இந்த சரிவு இந்திய பொருளாதாரத்தில் எந்த தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.
தனியார் நிறுவனங்களின் பங்கு விலையில் ஏற்படும் மாற்றமானது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தாது என நான் நினைக்கிறேன். இது ஒரு சாதாரண செயல்முறை தான். கடந்த காலத்திலும் இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் இருந்தன என ஜல் சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பல கருத்துகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications