அதானி குழுமத்தை அசைத்து பார்த்த ஹிண்டர்ன்பர்க்.. கிடப்பில் ரூ.34,900 கோடி திட்டம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி குழும நிறுவனத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்தன, இப்பிரச்சனை தற்போது வரையில் விட்ட குறை தொட்ட குறையாக நீடித்துக் கொண்டுள்ளது.

 

இதற்கிடையில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பும் கடும் வீழ்ச்சியினை கண்டுள்ளன. இது ஒரு புறம் எனில், பல்வேறு பிரச்சனைகளை அதானி குழுமம் எதிர்கொண்டது.

இப்பிரச்சனைகளில் இருந்து எப்படியேனும் மீண்டு விட வேண்டும் என அதானி குழுமம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், திரும்ப திரும்ப ஏதேனும் ஒரு விதத்தில் ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது எனலாம்.

 ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸில் வினோத் அதானி ஒரு புரோமோட்டர்.. அதானி குழுமம் பலே விளக்கம்! ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸில் வினோத் அதானி ஒரு புரோமோட்டர்.. அதானி குழுமம் பலே விளக்கம்!

கிடப்பில் போடப்பட்ட திட்டம்

கிடப்பில் போடப்பட்ட திட்டம்

இதனை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவானது ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், அதானி குழுமத்தின் முந்த்ரா பெட்ரோகெமிக்கல் திட்டமானது, சுமார் 34,900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டமானது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

அதானி எண்டர்பிரைசஸ் துணை நிறுவனம்

அதானி எண்டர்பிரைசஸ் துணை நிறுவனம்

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான துணை நிறுவனம் தான் முந்த்ரா பெட்ரோசெம் லிமிடெட். இது குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைய திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு கீரின் நிலக்கரி முதல் பிவிசி வரையில் அமையலாம் என கூறப்பட்டது.

 நடவடிக்கைகளை நிறுத்துங்கள்
 

நடவடிக்கைகளை நிறுத்துங்கள்

தற்போதைக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் கிரீன் பிவிசி திட்டத்தினை தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த குழு விற்பனையாளர்களுக்கும், சப்ளையர்களுக்கும் மெயில் அனுப்பியதாகவும், இதன் மூலம் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 கடன்கள் அடைப்பு

கடன்கள் அடைப்பு

அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் சரிந்த சாம்ராஜ்ஜியத்தியனை தூக்கி நிறுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக அதானி குழுமம் கடன்களை திரும்ப செலுத்துவது கடினம் என ஹிண்டர்ன்பர்க் சுட்டிக் காட்டிய நிலையில், செலுத்த வேண்டிய கடன்களையும், இன்னும் கால அவகாசம் உள்ள கடன்களையும் திரும்ப செலுத்தி வருகின்றது.

 செலவினங்கள் குறைப்பு

செலவினங்கள் குறைப்பு

இதற்கிடையில் புதிய மூலதன செலவினங்களை குறைத்துள்ளது எனலாம். புதியதாக கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம் என அதானி குழுமம் திட்டமிட்டிருக்கலாம். அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்பிஓவும் நிறுத்தப்பட்ட நிலையில், இது முதலீட்டு வரத்தினை குறைத்துள்ளது. இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு உதவிகரமாக அமைந்திருக்கும். ஆனால் ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது FPO வெளியாகும் அந்த சமயத்தில் வெளியான நிலையில், முதலீட்டாளர்கள் நலன் கருதி அதானி குழுமம் அதனை நிறுத்தியது.

மீண்டும் தொடரலாம்

மீண்டும் தொடரலாம்

ஆக இப்படி பல நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தான் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. எனினும் அதானி குழுமம் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.

எனினும் இன்னும் சிறிது காலம் இப்பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம் என தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Group's Rs.34,900 crore Gujarat project affected by Hindenburg report

Adani Group's Rs.34,900 crore Gujarat project affected by Hindenburg report
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X