மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மையப் பகுதியில் ஆசியாவின் மிகப் பெரிய குடிசை பகுதியான தாராவி உள்ளது. பல நூறு ஏக்கர் பரப்பளவை கொண்ட தாராவியில் சுமார் 10 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிழைப்புக்காக மும்பை சென்றால் அவர் முதலில் தஞ்சம் அடையும் பகுதி பெரும்பாலும் தாராவியாகத் தான் இருக்கும்.
ஏனென்றால் அந்த குடிசை பகுதியில் வசிக்கும் பெரும்பகுதியினர் தமிழர்கள். தாராவி, குடிசைகள் மட்டுமே உள்ள பகுதி கிடையாது, அங்கு பல்வேறு வணிக கட்டிடங்களும் உள்ளன. இந்தியாவின் நிதி தலைநகரான போற்றப்படும் மும்பையில் இந்த ஒரு பகுதி மட்டும் நீண்ட காலமாக அப்படியே மாறாமல் இருக்கிறது.

இதனையடுத்து மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த பல அரசுகள் மும்பையின் மற்ற பகுதிகளை போலவே தாராவியை நவீனமயமாக்க முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் அந்த பகுதி மக்களின் கடும் எதிர்ப்பால் அது சாத்தியமில்லாமல் போனது.
சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படம், தாராவியை மையமாக வைத்துத்தான் எடுக்கப்பட்டு இருந்தது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய மகா விகாஸ் அகாடி அரசாங்கம் கடந்த ஆண்டு நவம்பரில் தராவி மறுசீரமைப்பு திட்டத்துக்கான டெண்டர் விட்டது.
இதில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிறுவனங்களில் அதானி குழுமம் அதிகபட்சமாக ரூ.5,069 கோடிக்கு ஏலம் கேட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு ஜூலையில் அதானி குழுமத்துக்கு தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு வழங்கியது.
தாராவி மறுசீரமைப்பு திட்டத்தின்படி, தாராவியில் உள்ள குடிசைகளை ஒழித்துவிட்டு குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வழங்குவது, குடிசைகள் இருந்த பகுதிகளில் வணிக வளாகங்கள் அமைப்பது, அலுவலகங்கள், விளையாட்டு அரங்குகள் அமைப்பது போன்ற அந்த பகுதியை நவீனமாக மாற்றும் பணிகளில் அதானி குழுமம் ஈடுபட உள்ளது.
இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், தாராவி குடிசை பகுதி மறுசீரமைப்பு திட்ட ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தாராவியில் உத்தவ் தாக்கரே தலைமையில் எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
இந்நிலையில் தாராவி மறுசீரமைப்பு திட்டம் தொடர்பாக அதானி குழுமம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2022 ஜூன் இறுதியில் ஆட்சியில் இருந்து வெளியேறிய மகா விகாஸ் அகாடி ஆட்சிக் காலத்தில் டெண்டர் நிபந்தனைகள் இறுதி செய்யப்பட்டன.
அனைத்து ஏலதாரர்களுக்கும் தெரிந்த கடமைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் உள்பட இறுதி செய்யப்பட்ட நிபந்தனைகள், டெண்டர் செயல்முறைக்கு பிறகு ஒப்பந்தம் பெற்றவருக்கு மாற்றம் செய்யப்படவில்லை. எனவே ஒப்பந்தம் பெற்றவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறானது. பல முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்ததால் தற்போது தாராவி திட்டம் கூடுதல் முக்கியத்துவத்தை பெறுகிறது.
தாராவியை மேற்கூறிய அனைத்து வசதிகளுடன் மாற்றும் சவாலையும் பொறுப்பையும் அதானி குழுமம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாராவியை மாற்றியமைத்து அதன் குடியிருப்பாளர்களுக்கு வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அத்தியாவசிய வசதிகளை வழங்கும் குறிப்பிடத்தக்க பணியை அர்ப்பணிப்புடன் செய்வோம் என்று அதானி குழுமம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications