அதானி போட்ட திட்டம்.. மோடி அரசுக்கு பறந்த கோரிக்கை.. பச்சை கொடி காட்டினால் கொண்டாட்டம் தான்..!!

இந்தியாவில் சுமார் 8 விமான நிலையங்களை நிர்வாகம் செய்யும் அதானி குழுமம், வேகமாக வளர்ந்து வரும், அதேவேளையில் தொடர்ந்து நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் விமான போக்குவரத்து சேவையில் முதலீடு செய்ய கடந்த சில மாதங்களாகத் திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் அதானி குழுமம் மத்திய அரசிடம் விமானச் சேவை நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கக் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து அதானி குழுமத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான ஜுகேஷிந்தர் ராபி சிங் கூறுகையில், இந்தியாவில் இருக்கும் 60 கோடி மக்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியும், ஆனால் இதற்கு, தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமான எண்ணிக்கை 10 மடங்கு உயர்த்தி 30000 ஆக அதிகரிக்க வேண்டும்.

அதானி போட்ட திட்டம்.. மோடி அரசுக்கு பறந்த கோரிக்கை.. பச்சை கொடி காட்டினால் கொண்டாட்டம் தான்..!!

இதை சாத்தியப்படுத்த எங்களுக்கு விமான சேவை துறையில் முதலீடு செய்ய அனுமதி கொடுக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நிதி ரிதியாக, நிறுவனத்தின் வாயிலாக அல்லது ஒரு தொழில்முனைவோருடன் கூட்டணியில் இப்படி ஏதாவது ஒரு வழியில் எங்களுக்கு முதலீடு செய்ய அனுமதி கொடுங்கள் என அதானி குழுமம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார் ஜுகேஷிந்தர் ராபி சிங்.

இந்தியாவில் விமான நிலையங்களை நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் விமான சேவைகளை இயக்க கூடாது என்ற விதிமுறை உள்ளது, குறிப்பாக 2006-ல் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டபோது போடப்பட்ட இந்தக் கட்டுப்பாடு சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில் தான் ஜுகேஷிந்தர் ராபி சிங் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதை ஒப்புக்கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு அதானி குழுமம் விமான நிலையத்தை நிர்வாகம் செய்வதில் இருந்து பயணிகள் விமான சேவை நிறுவனத்தில் முதலீடு செய்கிறது தகவல்கள் வெளியான போது அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்தது.

இந்த மாத துவக்கத்தில் கூட அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவன தலைவரான அருண் பன்சாலும் மறுத்தார். இந்திய பயணிகள் விமான சேவை சந்தையை டாடா குழுமத்தின் ஏர் இந்தியா மற்றும் ராகுல் பாத்தியாவின் இண்டிகோ மட்டுமே ஆட்சி செய்து வருகிறது.

ஸ்பைஸ்ஜெட், அகசா ஏர் போன்ற நிறுவனங்கள் மிகவும் சிறிய அளவிலான வர்த்தகத்தை மட்டுமே வைத்துள்ளது. இந்த நிலையில் அதானி குழுமம் தனி விமான சேவை நிறுவனத்தை உருவாக்கிப் போட்டிப்போடுவது என்பது கடுமையான பயணமாக இருக்கும்.

இதனால் தற்போது சந்தையில் இருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்வது மூலம் எளிதான வழியாக இருக்கும் என்பதாலேயே முதலீடு செய்ய மோடி அரசிடம் அனுமதி கேட்டுள்ளது அதானி குழுமம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+