சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்து வரும் அதானி குழுமம், இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் அண்டை நாடுகளிலும் பெரும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இலங்கையில் கிரீன் எனர்ஜி, துறைமுகம் திட்டங்கள், பங்களாதேஷ் நாட்டில் மின்சார திட்டங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து தற்போது பூட்டான் நாட்டின் பிரபலமான நிறுவனத்துடன் முக்கியமான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது அதானி குழுமம்.

இதற்காக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே-யை (Dasho Tshering Tobgay) நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் வேளையில் அதானி குழுமம் மற்றும் அந்நாட்டு அரசு நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் முதலீட்டாளர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.
பூட்டான் நாட்டில் 570 மெகாவாட் திறன் கொண்ட பசுமை நீர்மின் நிலையம் (Green Hydroelectric Plant) அமைப்பதற்கு அதானி குழுமம், மற்றும் அந்நாட்டின் Druk Green Power Corporation (DGPC) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது.

பூட்டான் பிரதமர் Dasho Tshering Tobgay மற்றும் பூட்டான் மன்னர் Jigme Khesar Namgyel Wangchuck ஆகியோரை சந்தித்த அதானி குழும தலைவர் கௌதம் அதானி, பூட்டானின் கட்டமைப்பு வளர்ச்சியைப் பாராட்டியுள்ளார். மேலும், நீர்மின் திட்டங்கள் உட்படப் பிற திட்டங்களிலும் பூட்டானுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் தெரிவித்துள்ளார் கௌதம் அதானி.
இந்த நிலையில் கௌதம் அதானி ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளமான எக்ஸ்-ல் செய்த பதிவில் "பூட்டான் பிரதமர் Dasho Tshering Tobgay அவர்களுடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியளித்தது. சுகா மாகாணத்தில் 570 மெகாவாட் திறன் கொண்ட பசுமை நீர்மின் நிலையம் அமைப்பதற்கு DGPC நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

பூட்டான் மன்னர் தலைமையின் கீழ் அந்நாடு மேற்கொண்டு வரும் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் பாராட்டத்தக்கவை. பூட்டானில் நீர்மின் திட்டங்கள் உட்பட பிற கட்டமைப்பு திட்டங்களிலும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறோம்" என்று பதிவிட்டார் கௌதம் அதானி.
பூட்டான் மன்னர் Jigme Khesar Namgyel Wangchuck அவர்களையும் சந்தித்த கௌதம் அதானி, கெலுபூ நகரத்தில் அமைக்கப்படவுள்ள சுற்றுச்சூழல் நட்பு திட்டமான "Gelephu Mindfulness City" திட்டத்தைக் கண்டு வியந்துள்ளதாக கௌதம் அதானி குறிப்பிட்டுள்ளார்.
கெலுபூ நகரத்தில் அமைக்கப்படவுள்ள பெரிய கம்ப்யூட்டிங் சென்டர்கள் மற்றும் தரவு சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல்-க்கு உகந்த வகையில் அமைக்கத் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதைப் பார்க்கும் போது தான் மிகவும் வியப்படைந்ததாகவும் கௌதம் அதானி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications