அதானி குழும பங்குகள் திங்கட்கிழமை 2-5% வரையில் சரிந்தன, அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் மட்டுமே அதிகப்படியான 5 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது, இதுமட்டும் அல்லாமல் நிஃப்டி குறியீட்டிலும் அதிகப்படியான நஷ்டம் பதிவாகியுள்ளது.
அதானி குழுமத்தின் பிற முக்கிய நிறுவன பங்குகளான அதானி பவர் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை தலா 4% சரிந்தன, அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் பங்குகள் தலா 3% சரிந்தன.

மேலும் மும்பை பங்குச்சந்தையில் அம்புஜா சிமெண்ட்ஸ் 4.07%, ஏசிசி 2.2% மற்றும் என்டிடிவி 3% சரிந்தன.
இந்த பெரும் சரிவுக்கு இரு முக்கியமான காரணங்கள் உள்ளது ஒன்று செமி அதானி - ஹிண்டன்பர்க் வழக்கு விசாரணை குறித்து விசாரணை முடித்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள். இது தவிர அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் ஆடிட்டராக டெலாய்ட் நிறுவனம் வெளியேறியது ஆகிய இரண்டும் தான்.
அதானி குழுமம் மீதான அமெரிக்காவின் ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து வந்த செபி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 14 (இன்று).
இந்த நிலையில் வழக்கில் குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றம் அடைந்துள்ளோம், விசாரணை முழுமையாகவும், தீர்க்கமாகவும் முடிக்கவும், இறுதி அறிக்கை சமர்பிக்கவும் கூடுதலாக 15 நாள் அவகாசம் தேவை என்ற கோரிக்கை உடன் மனு கொடுத்துள்ளது.
அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமாக இருக்கும் அதானி போர்ட்ஸ் & SEZ இன் தணிக்கையாளர் அதாவது ஆடிட்டர் நிறுவனமான Deloitte Haskins & Sells LLP தனது பொறுப்பில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்த நிலையில் அதானி போர்ட்ஸ் & SEZ நிர்வாகம் இதற்கு ஒப்புதல் அளித்து MSKA & Associates Chartered Accountants நிறுவனத்தை மாற்றாக நியமித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான நிலையில் திங்கட்கிழமை அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு அதிகளவிலான சரிவை சந்தித்தது. இதன் மூலம் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழுமத்தின் 10 பங்குகளின் நிலவரம்
அதானி எண்டர்பிரைசஸ் - 3.26 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 1.66 சதவீதம் சரிவு
அதானி பவர் - 0.78 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 2.69 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 2.09 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 1.88 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 1.67 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 2.27 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 3.49 சதவீதம் சரிவு
NDTV - 1.37 சதவீதம் சரிவு


Click it and Unblock the Notifications