இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக இருக்கும் அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்ட அறிக்கையின் தாக்கம் குறைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக இக்குழும பங்குகள் உயர்வுடன் காணப்பட்டது.
ஆனால் இன்று அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் சில அரசு அமைப்புகள் துவங்கியுள்ள விசாரணையின் மூலம் அதானி பங்குகள் இன்று பெரிய அளவில் சரிந்துள்ளது.

அதானி குழுமம் தனது அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு எப்படிப்பட்ட பிம்பத்தை காட்டியுள்ளது, எந்த விபரங்களை பகிர்ந்துள்ளது என்பதை அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வுக்கு முக்கிய காரணம் ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் அதானி குழுமம் தனது நிறுவனம் பங்கு விலைகளை உயர்த்த வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது, இதன் வாயிலாக தான் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்களுக்கு அதானி குழுமம் எவ்விதமான தரவுகளை பகிர்ந்துள்ளது என ஆய்வு செய்ய துவங்கியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
நியூ யார்க், புரூக்ளினில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகங்கள் அதானி குழுமத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் நிறுவன முதலீட்டு நிறுவனங்களுக்கு கடந்த சில மாதங்களில் விபரங்களை சேகரிப்புக்கான கோரிக்கைகளை அனுப்பியுள்ளது. இதேபோன்ற விபரங்கள் சேகரிப்பு நடவடிக்கையை அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEC செய்து வருவதாக இதுக்குறித்து அறிந்தவர் ப்ளூம்பெர்க்-கிற்கு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகங்கள் அதானி குழுமம் கேட்டுள்ள தரவுகள் மூலம் எவ்விதமான கிரிமினல் அல்லது சிவில் வழக்குகள் தொடர முடியாது. சட்ட அமைப்புகள் பெரும்பாலும் இதுப்போன்ற நடவடிக்கைகளை அவ்வபோது எடுத்தாலும் இது எவ்விதமான விசாரணைக்கும் வழிவகுக்காது.

இதற்கிடையில், இந்த சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபி ஜனவரி 24, 2023 அன்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கை மூலம் பங்குச்சந்தையில் ஏற்பட்டு தடுமாற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ஆகஸ்ட் மாதம் செமி தனது ஆய்வறிக்கையை முடித்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்கும். இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளின் நிலவரம் என்ன?
அதானி எண்டர்பிரைசஸ் - 7.25 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 4.50 சதவீதம் சரிவு
அதானி பவர் - 5.82 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 6.14 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 1.90 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 3.24 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 3.48 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 2.66 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 3.52 சதவீதம் சரிவு
NDTV - 4.27 சதவீதம் சரிவு


Click it and Unblock the Notifications