அதானி குழும பங்குகள் சரிவு.. ரூ.40,000 கோடி இழப்பு.. விக்கிப்பீடியா அறிக்கையால் கவலை!

ஆதானி குழும பங்குகள் தொடர்ந்து ஜனவரி 24 பிறகு பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன. தொடர்ந்து பல ஆயிரம் கோடி சந்தை மதிப்பினை இதுவரையில் இழந்துள்ளன.. இதற்கிடையில் இன்றும் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்துள்ள நிலையில், அதானி குழுமத்தின் சந்தை மதிப்பானது 40,000 கோடி ரூபாய் எனும் அளவுக்கு இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.

அதானி குழுமத்தின் இந்த வீழ்ச்சியானது அதானி குழுமம் விக்கிப்பீடியாவில், அதானி குழுமம் குறித்தான, நம்பகத்தன்மை இல்லாத தகவல்களை உள்ளீடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

பணம் வாங்கிக் கொண்டு எழுதும் ஆசிரியர்கள் பலர், அதானி குழுமம் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பல அதானி குழுமம் சம்பந்தமான கட்டுரைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 இது உண்மை தானா?

இது உண்மை தானா?

இதில் இன்னும் கவனத்தில் கொள்ளத்தக்க விஷயம் என்னவெனில் பணம் வாங்கிக் கொண்டு எழுதும் ஆசிரியர் அதானி குழும நிறுவனத்தின் ஐபி முகவரியில் இருந்து, அதானி குழுமத்தின் கட்டுரையை முழுவதுமாக மாற்றி எழுதியுள்ளார் என்று விக்கிபீடியாவால் நடத்தப்படும் தி சைன்போஸ்ட் செய்தியை வெளியிட்டுள்ளது. இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. இது ஹிண்டர்ன்பர்க் அறிக்கை சொல்வதெல்லாம் சரியானதா? என்று யோசிக்கும் அளவுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ்

அதானி எண்டர்பிரைசஸ்

இதற்கிடையில் தான் அதானி குழும பங்குகள் இன்றும் கடும் வீழ்ச்சியினை சந்தித்துள்ளன. குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இன்று 10% சரிவினைக் கண்டு, 1411.60 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது தொடர்ந்து கடந்த 4 அமர்வுகளாக மீண்டும் கடும் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றது.

60% இழப்பு

60% இழப்பு

இதுமட்டும் அல்ல, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர்ம் அதானி கிரீன் என பல பங்குகளும் 5% சரிவினைக் கண்டு லோவர் சர்க்யூட் ஆகியுள்ளன. இதற்கிடையில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மூலதனம் ஆனது 100 பில்லியன் டாலர்களுக்கு கீழாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த மாதத்தில் இருந்து அதானி குழும பங்குகள் அவற்றின் மொத்த மதிப்பில் 60% இழப்பினை கண்டுள்ளன.

இவ்வளவு இழப்பா?

இவ்வளவு இழப்பா?

ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியானதில் இருந்தே, அதானி குழுமத்தின் 10 பங்குகளின் சந்தை மூலதனம் 11.5 லட்சம் கோடி ரூபாய் முதல் , 7.69 லட்சம் கோடி ரூபாய் வரையில் இழப்பினை கண்டுள்ளது. இது சந்தையில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்துள்ளதையே காட்டுகின்றது.

எது உண்மை?

எது உண்மை?

அதானி குழுமம் நம்பிக்கையை மீட்டெடுக்க என்னதான் நடவடிக்கையினை எடுத்தாலும், தொடர்ந்து அதானி குழும பங்குகள் சரிவினையே கண்டு வருகின்றன. அதானி குழுமம் கடனை அடைக்க திட்டமிட்டு வரும் இந்த சூழலில் விக்கிப்பீடியா தகவல் பற்றிய அறிவிப்பானது வந்துள்ளது.

கடன் மறு நிதியளிப்பு

கடன் மறு நிதியளிப்பு

தொடர்ந்து கடன்களை முன் கூட்டியே செலுத்த திட்டமிடும் அதானி குழுமம், பணத்தை சேமிக்கும் வழியில் இறங்கியுள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் இன்னும் சில வாரங்களில் அதன் கடன் மறு நிதியளிப்பு திட்டத்தினை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர அடுத்த மாதம் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை முன் கூட்டியேவும் செலுத்த திட்டமிட்டுள்ளது. செலவை கட்டுப்படுத்தி, சேமிப்பை அதிகரிக்க அதானி குழுமம் முயற்சிக்கிறது. இதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+