அவர் நட்புன்னா சும்மாவா..? லாப வெள்ளத்தில் அதானி..!

கடந்த 2019-ம் ஆண்டு சீரும் சிறப்புமாக நிறைவடைந்து இருக்கிறது. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களிலும் சிலருக்கு 2019 ஜாக்பாட் ஆண்டாக இருந்து இருக்கிறது.

போகிற போக்கில், மும்பை பங்குச் சந்தையின் டாப் 500 பங்குகளில், கடந்த 2019-ம் ஆண்டில் அதிக விலை ஏற்றம் கண்ட கம்பெனி எது என்று பார்த்தோம்.

அதில் நம்மை எல்லாம் ஆச்சர்யப்படுத்தும் விதமாக, அதானி க்ரீன் எனர்ஜி என்கிற கம்பெனி தான் முதல் இடத்தில் இருக்கிறது.

யாருடைய கம்பெனி

யாருடைய கம்பெனி

குஜராத் மாநிலத்தின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் மற்றும் தற்போதைய மத்திய அரசின் மேலிடம் வரை பலமான செல்வாக்கு கொண்டவர் தான் கெளதம் அதானி. இவருக்குச் சொந்தமான கம்பெனி தான் மேலே சொன்ன அதானி க்ரீன் எனர்ஜி. இந்த நிறுவனம் அப்படி என்ன லாபம் பார்த்துவிட்டது..?

அதானி க்ரீன் லாபம்

அதானி க்ரீன் லாபம்

இது ஒரு மரபுசார ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம். கடந்த ஜனவரி 01, 2019 அன்று இந்த அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை வெறும் 41 ரூபாய் 50 பைசாக்கு வியாபாரமாகத் தொடங்கியது. ஆனால் 31 டிசம்பர் 2019-ல் இதே பங்கின் விலை 166 ரூபாய் 50 பைசாவுக்கு நிறைவடைந்து இருக்கிறது. ஆக 301.20 சதவிகிதம் நறுக்கென லாபம் பார்த்து இருக்கிறது.

மற்ற நிறுவனங்கள்

மற்ற நிறுவனங்கள்

மத்திய அரசின் மேலிடம் வரை செல்வாக்கு இருப்பதால் தானே, விமான நிலையங்களை பராமரிக்கும் வேலையில் முன் அனுபவம் எதுவும் இல்லாத அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு, இந்தியாவின் 5 விமான நிலையங்களை பராமரிக்கும் காண்டிராக்டுகள் கொடுக்கப்பட்டது. எனவே அதானி குழும நிறுவனங்களின் மற்ற பங்கு விலைகளையும் ஆராய்ந்தோம். அதிலும் நமக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தன.

அதானி டிரான்ஸ்மிஷன்

அதானி டிரான்ஸ்மிஷன்

இது ஒரு மின் பகிர்மான நிறுவனம். இந்த அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்கின் விலை கடந்த ஜனவரி 01, 2019 அன்று வெறும் 199 ரூபாய் 50 பைசாக்கு வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் 31 டிசம்பர் 2019-ல் இதே பங்கின் விலை 331 ரூபாய் 90 பைசாவுக்கு நிறைவடைந்து இருக்கிறது. ஆக 66.37 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கிறது. மத்திய அரசோடு முஸ்தப்பா பாட்டு பாடினால் இவ்வளவு லாபமா..?

அதானி கேஸ்

அதானி கேஸ்

அதானி கேஸ் நிறுவனம், கேஸ் விநியோகிக்கும் ஒரு நிறுவனம். இந்தியாவின் பல மாநகரங்களில் இவர்களின் கேஸ் தான் சமைக்க பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஜனவரி 01, 2019 அன்று வெறும் 101 ரூபாய் 10 பைசாக்கு வர்த்தகமாகத் தொடங்கி, 31 டிசம்பர் 2019-ல் இதே பங்கின் விலை 162 ரூபாய் 70 பைசாவுக்கு நிறைவடைந்து இருக்கிறது. ஆக 29.16 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கிறார்கள்.

அதானி பவர்

அதானி பவர்

அதானி பவர், மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம். மும்பை போன்ற பெருநகரங்களுக்கு, நம் அதானி தான் ஒலி கொடுக்கும் வேந்தர். இவர்கள் மின்சாரத்தில் தான் மும்பை மின்னிக் கொண்டு இருக்கிறது. ஜனவரி 01, 2019 அன்று 50 ரூபாய் 80 பைசாக்கு வர்த்தகமாகத் தொடங்கியது. 2019-ம் ஆண்டு முடிவில் 31 டிசம்பர் 2019 அன்று இதே பங்கின் விலை 61 ரூபாய் 80 பைசாவுக்கு நிறைவடைந்து இருக்கிறது. ஆக 21.65 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கிறது.

ஒரே ஒரு நஷ்டக் கணக்கு

ஒரே ஒரு நஷ்டக் கணக்கு

அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனங்களில், கடந்த 2019-ல் நஷ்டம் கண்டு இருக்கிறது என்றால் அது ஆதானி போர்ட்ஸ் நிறுவனம் மட்டும் தான். ஜனவரி 01, 2019 அன்று 387 ரூபாய் 20 பைசாக்கு வர்த்தகமாகத் தொடங்கியது. 2019-ம் ஆண்டு முடிவில் 31 டிசம்பர் 2019 அன்று இதே பங்கின் விலை 368 ரூபாய் 95 பைசாவுக்கு நிறைவடைந்து இருக்கிறது. ஆக 5.49 சதவிகிதம் நஷ்டம் பார்த்து இருக்கிறது.

ஒட்டு மொத்தமாக

ஒட்டு மொத்தமாக

ஒட்டு மொத்தமாக அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கும் மொத்த நிறுவனங்களின் லாபத்தைக் கூட்டினால் 473.99 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கிறது. அதாவது 01-01.2019 அன்று ஒரு லட்சம் ரூபாயை அதானி பங்குகளில் போட்டு இருந்தால் 31-12-2019 அன்று 4.73 லட்சத்தை எடுத்து இருக்கலாம். எல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துக்குவான் என்கிற பழமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ... நம் அதானிக்கு 2019-ல் அம்சமாக பொருந்தி இருக்கிறது. அந்த மேல இருக்குறவன் யாருன்னு உங்களுக்கே தெரியுமோ..! மித்ரோ.. பாய்யோ அவுர் பெஹனோ..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+