எஸ்.பி. அதானி குடும்ப அறக்கட்டளை இன்று அதானி குழுமத்தின் 4 நிறுவனங்களில் ரூ.15,446 கோடி மதிப்பிலான சுமார் 21 கோடி பங்குகளை ஒப்பன் மார்கெட்டில் விற்பனை செய்துள்ளது.
அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் எஸ்.பி. அதானி குடும்ப அறக்கட்டளை இன்று அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய 4 நிறுவனங்களின் பங்குகளை பிளாக் டீல் மூலம் விற்பனை செய்துள்ளது.

எஸ்.பி. அதானி குடும்ப அறக்கட்டளை விற்பனை செய்த ரூ.15,446 கோடி மதிப்பிலான சுமார் 21 கோடி பங்குகளை அமெரிக்காவின் GQG Partners என்னும் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம் புதிய கடன் வாங்க முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் அதானி குழுமத்திற்கு 15,446 கோடி நிதி கிடைத்துள்ளது.
இந்த பங்கு விற்பனை மூலம் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய 4 நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 3-5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இந்த பங்கு விற்பனை மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்குகளை ரூ.1,410.86 என்ற விலையில் GQG Partners சுமார் 5,460 கோடி ரூபாய் முதலீடு செய்து இணையான பங்குகளை வாங்கியுள்ளது. இதேபோல் அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவன பங்குகளை ரூ.596.20 என்ற விலையில் 5,282 கோடி ரூபாயும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகளை 668.4 ரூபாய் விலை 1898 கோடி ரூபாய்க்கும், அதானி கிரீன் எனர்ஜி பங்குகளை 504.6 ரூபாய் விலை.ில் 2806 கோடி ரூபாய்க்கும் GQG Partners வாங்கியுள்ளது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழும பங்குகளின் நிலவரம்
- அதானி எண்டர்பிரைசஸ் - 2.69 சதவீதம் உயர்வு
- அதானி போர்ட்ஸ் - 3.50 சதவீதம் உயர்வு
- அதானி பவர் - 4.98 சதவீதம் உயர்வு
- அதானி டிரான்ஸ்மிஷன் - 5.00 சதவீதம் உயர்வு
- அதானி கிரீன் எனர்ஜி - 4.99 சதவீதம் உயர்வு
- அதானி டோட்டல் கேஸ் - 4.41 சதவீதம் உயர்வு
- அதானி வில்மார் - 4.99 சதவீதம் உயர்வு
- ஏசிசி லிமிடெட் - 1.85 சதவீதம் உயர்வு
- அம்புஜா சிமெண்ட்ஸ் - 4.94 சதவீத உயர்வு
- NDTV - 4.96 சதவீதம் உயர்வு
இதன் மூலம் இன்று அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 7.86 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 2 நாள் வர்த்தகத்தில் மட்டும் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 74,302.47 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications