ரூ.66,000 கோடிக்கு மேல் மாயம்.. அதானி குழும முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. !

இன்று காலை தொடக்கம் முதல் கொண்டே இந்திய சந்தையானது சரிவிலேயே காணப்பட்டது. முடிவிலும் சரிவிலேயே முடிவடைந்தது. பல முன்னணி நிறுவன பங்குகளும் பலத்த சரிவினைக் கண்டன.

அந்த வகையில் நாட்டின் முன்னணி வணிக குழுமமான அதானி குழும பங்குகளும் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, ஒரே நாளில் 66,500 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.

முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். எனினும் இதற்கு புராபிட் புக்கிங்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து அதானி குழும பங்குகள் பலவும் நல்ல ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இன்று அதில் புராபிட் புக்கிங் செய்யப்பட்டிருக்கலாம். அதோடு இன்று ஒட்டுமொத்த சந்தையிலும் மொத்தமாக செல்லிங் அழுத்தம் காணப்படுகின்றது. இதன் காரணமாகவும் அதானி குழும பங்குகளில் அதன் எதிரொலி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.66,500 கோடி மாயம்

ரூ.66,500 கோடி மாயம்

 

இன்று காலை அமர்விலேயே சரிவினைக் காணத் தொடங்கிய பங்குகள், பிற்பாதியில் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. இதனால் அதானி குழும பங்குகளில் கிட்டத்தட்ட 8% வரையில் சரிவினைக் கண்டுள்ளன.
அதானி குழுமத்தினை சேர்ந்த 10 நிறுவனங்களுமே சரிவிலேயே காணப்பட்டன. 2.20 மணி நிலவரப்படியே அதானி குழுமத்தின் சந்தை மதிப்பானது சுமார் 66,500 கோடி ரூபாய் சரிவில் காணப்பட்டது.

 

மோசமான சரிவில் அதானி எண்டர்பிரைசஸ்

மோசமான சரிவில் அதானி எண்டர்பிரைசஸ்

இந்த பட்டியலில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 8% சரிவினைக் கண்டு, 3554.30 என்ற லெவலில் மதியம் காணப்பட்டது. எனினும் முடிவில் 5.41% சரிவினைக் கண்டு, 3646.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று மட்டும் 208.40 ரூபாய் இப்பங்கின் விலையானது முடிவின் அடிப்படையில் சந்தை மதிப்பானது 27,800 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.

அதானி டோட்டல் கேஸ்

அதானி டோட்டல் கேஸ்

அதானி டோட்டல் கேஸ் பங்கு விலையானது 4% சரிவினைக் கண்டு, 3490.70 ரூபாயாக இருந்தது. எனினும் முடிவில் சற்று அதிகரித்து, 3656.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது. மதிய நிலவரப்படி சந்தை மதிப்பானது, 11,300 கோடி ரூபாய் குறைந்திருந்தது. .

இதே அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எக்னாமிக் ஜோன் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது மதிய நிலவரப்படி 6000 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. மதிய நிலவரப்படி 4% சரிவினைக் கண்டிருந்தது. முடிவில் 2.48% சரிவினைக் கண்டு, 796.40 ரூபாயாக முடிவடைந்தது.

அதானி கிரீன் எனர்ஜி & அதானி டிரான்ஸ்மிஷன்

அதானி கிரீன் எனர்ஜி & அதானி டிரான்ஸ்மிஷன்

அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி பவர் நிறுவனங்கள் முறையே, 5000 கோடி ரூபாய் இழப்பினை கண்டது. மதிய அமர்வில் சரிவினைக் கண்டிருந்தாலும் முடிவில் சற்று அதிகரித்து, 1895.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது முடிவில், 1.43% அதிகரித்து, 2652 ரூபாயாக முடிவடைந்துள்ளது. அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலையானது, 2.95% சரிவினைக் கண்டு, 279.2 ரூபாயாக முடிவடைந்தது.

அதானி வில்மர்

அதானி வில்மர்

அதானி வில்மர் நிறுவனம் சமீபத்தியில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதன் பங்கு விலையானது 4% மேல் குறைந்து, 25000 கோடி ரூபாய் சந்தை மதிப்பினை இழந்தது. எனினும் முடிவில் 2.41% குறைந்து, 571.45 ரூபாயாக முடிவடைந்தது.

கையகப்படுத்திய நிறுவனங்களின் நிலை

கையகப்படுத்திய நிறுவனங்களின் நிலை

அதானி குழுமம் சமீபத்தில் அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களை கையகப்படுத்தியது. இந்த நிறுவனங்களின் பங்கு விலையானது தலா 3% சரிவில் காணப்பட்டது. இதே என்டிடிவி நிறுவனத்தின் பங்கு விலையானது 4% சரிவினைக் கண்டிருந்தது. எனினும் முடிவில் ஏசிசி சிமெண்ட் 1.85% சரிவிலும், அம்புஜா சிமெண்ட் 1.96% சரிவிலும், என்டிடிவி பங்கின் விலையானது 2.69% சரிவிலும் முடிவடைந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+