அதானி குழும முறைகேடு குறித்து விசாரிக்க SC உத்தரவு.. கிடுகிடுவென ஏற்றம் கண்ட பங்குகள்..!

அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. இதன் காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மதிப்பானது பாதிக்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது.

இந்த சரிவுக்கு முடிவே இல்லையா? என்ற கேள்வியானது பலரின் மத்தியில் எழுந்தது. இதற்கு செபி என்ன செய்ய போகிறது என்ற கேள்விகள் எழுந்தது.

இப்படி ஒரு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது, சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை 2 மாதங்களுக்குள் விசாரணை செய்யுமாறு செபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக 6 பேர் கொண்ட குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 2 மாதத்தில் முழு ரிப்போர்ட்

2 மாதத்தில் முழு ரிப்போர்ட்

ஆக இதுகுறித்த முழுமையான தகவல் என்பது இன்னும் இரண்டு மாதத்தில் வெளியாகலாம் என்ற நிலை தற்போது வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள இந்த குழுவுக்கு மத்திய அரசு, நிதி சார்ந்த சட்ட அமைப்புகள், செபி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பங்குகளின் நிலை என்ன?

பங்குகளின் நிலை என்ன?

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து அதானி குழுமத்தினை சேர்ந்த பல பங்குகள் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன. குறிப்பாக அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன், அதானி வில்மர், அதானி பவர் உள்ளிட்ட பங்குகள் 5% அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளன. இதே இக்குழுமத்தினை சார்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது முன்னதாக தொடக்கத்தில் 10% சரிவினைக் கண்ட நிலையில், இந்த தீர்ப்புக்கு பிறகு, 1% அதிகமாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த 2 நாட்களில் அதானி குழும பங்குகள் 31% ஏற்றம் கண்டுள்ளது.

பொது நல மனு

பொது நல மனு

இதற்கிடையில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி கிரீன் ஆகியவற்றில் பலத்த பதிவுகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியான நிலையில், தொடர்ந்து சரிவினை கண்டு வந்த அதானி குழும பங்குகள் மேலும் சரிவினைக் காணலாம் என்ற நிலையே இருந்து வந்தது. இதற்கிடையில் இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க பல பொது நல மனுக்கள் பதிவாகின.

யார் தலைமையில் குழு?

யார் தலைமையில் குழு?

இந்த நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தலைமையிலான அமா்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதானி - ஹிண்டென்பர்க் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குழுவில் யார் யார்?

குழுவில் யார் யார்?

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெறிமுறை குழு தேவை என்பதை உணர்கிறோம். முன்னாள் நீதிபதி ஏம்.எம். சப்ரே தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பிப்பதாகவும், இந்த குழுவில் முன்னாள் நீதிபதிகள் ஓ.பி. பட், ஜே.பி. தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் சிறப்பு நிபுணர் குழுவில் இடம்பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.

இவ்வளவு சரிவா?

இவ்வளவு சரிவா?

ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியானதில் இருந்து, அதானி குழும பங்குகள் 80% மேலாக சரிவினைக் கண்டுள்ளன. இதற்கிடையில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது.

பெரும் ஆறுதல்

பெரும் ஆறுதல்

அதானி குழும பங்குகளில் எல்ஐசி உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதில் முதலீடு செய்த சாமானியர்களின் முதலீட்டின் நிலை என்ன என எதிர்கட்சிகள் தொடங்கி பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது பெரும் ஆறுதலை கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+