இந்திய வர்த்தகத் துறையிலும், பங்குச்சந்தை மதிப்பீட்டிலும் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு அதானி குழுமத்திற்கு உள்ளது என்ற அளவுக்கு இந்திய வர்த்தகத்தில் சந்தையில் பெரும் ஆதிக்கத்தைக் கொண்டு இருந்தது அதானி குழுமம்.
இந்த நிலையில் ஜனவரி 24 ஆம் தேதி ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு அதானி குழுமம் குறித்து வெளியிட்ட கணக்கியல் முறைகேடுகள், நிதி பரிமாற்றத்தில் இருக்கும் சந்தேகம், கௌதம் அதானி சகோதரர் வினோத் அதானிக்கு 38க்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள் உடனான தொடர்பு, அதானி குழுமம் - வினோத் அதானி - சீன நாட்டவர் Chang Chung Ling உடன் தொடர்பு குறித்துக் கேள்வி எழுப்பியது.
இதன் மூலம் அதானி குழுமத்தை எதிராகப் பல அமைப்புகள் எடுத்த அடிப்படையில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிந்தது.
10 லட்சம் கோடி ரூபாய்
ஹிண்டர்பர்க் அமைப்பு அறிக்கை வெளியிட்டு இன்று வரையில் மொத்தம் 7 வர்த்தக நாளில் மட்டும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 10 அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தியா மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்
ஹிண்டன்பர்க் அறிக்கையை அதானி குழுமம் இந்தியா மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று விமர்சனம் செய்த வேளையில் ஹிண்டர்பர்க் அமைப்பு அதானி குழுமம் இந்தப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப முயன்று தேசியவாத கதையைப் பேச துவங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
7 நாள்
அதானி குழுமத்தால் இந்தியாவின் எதிர்காலம் தடுக்கப்படுகிறது, தேசத்தைத் திட்டமிட்டுச் சூறையாடப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தது. இந்த நிலையில் கடந்த 7 நாளில் 10 அதானி குரூப் பங்குகளின் சந்தை மதிப்பு 51 சதவீதம் சரிந்து மொத்தம் 9.31 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ்
இன்றைய வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 30 சதவீதம் வரையில் சரிந்து 1017.10 ரூபாய் அளவிற்குக் குறைந்து புதிய 52 வார சரிவை பதிவு செய்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை அமைப்பு
இந்த நிலையில் முதலீட்டாளர் முதலீட்டு மதிப்பைப் பாதுகாக்கும் விதமாகத் தேசிய பங்குச்சந்தை அமைப்பு அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் தடுமாற்றத்தைக் கட்டுப்படுத்த குறுகிய காலக் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் சேர்த்துள்ளது.
இன்றைய வர்த்தகச் சரிவு
இன்று 12 மணியளவில் அதானி குழுமத்தின் 10 பங்குகளின் நிலவரம்
அதானி எண்டர்பிரைசஸ் - 17.82 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 3.13 சதவீதம் சரிவு
அதானி பவர் - 5.00 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 10.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 10.00 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 4.99 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 1.67 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 2.54 சதவீதம் சரிவு
NDTV - 4.98 சதவீதம் சரிவு
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications