அதானி குழும பங்குகள் வரும் நாட்களிலும் சரியுமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க பாருங்க?

கடந்த சில அமர்வுகளாகவே அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று அதானி குழுமத்திற்கு பிளாக் பிரை டே என்றே கூறலாம்.

Recommended Video

Adani VS Hindenburg | US-ல் நடந்த Balloon விபத்திற்கும்...Adani Shares சரிவிற்கும் என்ன தொடர்பு?

அந்தளவுக்கு அதானி குழும பங்குகள் அனைத்தும் கடும் வீழ்ச்சியினை சந்தித்தன.

பில்லியனர் ஆன கெளதம் அதானியின் 7 நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

லோவர் சர்க்யூட்

லோவர் சர்க்யூட்

கடந்த வார இறுதியில் அதானி குழுமத்தின் சில பங்குகள் லோவர் சர்க்யூட் ஆகின. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பெருத்த இழப்பினை சந்தித்தனர் எனலாம்.

இப்படி ஒரு சிக்கலுக்கும் மத்தியில் கடந்த வார இறுதியில் அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் அதன் உரிமை பங்கு வெளியீட்டினை செய்தது. இந்த வெளியீடும் செல்லிங் அழுத்தத்திற்கு வழிவகுத்தது எனலாம்.

ஹிண்டர்ன்பர்க் பரபர அறிக்கை

ஹிண்டர்ன்பர்க் பரபர அறிக்கை

இவற்றின் மத்தியில் அதானி குழும நிறுவனங்கள் பல மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி, அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டர்ன்பர்க் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவே அதானி குழும பங்குகளின் சரிவுக்கு முக்கிய காரணமாகவும், இருந்தது. இந்த பிரச்சனையானது இத்தோடு முடிந்ததா? என்றால் நிச்சயம் இல்லை என்றே கூறலாம்.

சட்டபூர்வ நடவடிக்கை

சட்டபூர்வ நடவடிக்கை

ஏனெனில் அதானி குழுமம் ஒரு இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்ள போவதாக அறிவித்தது. மறுபுறம் செபியும் இந்த பிரச்சனை குறித்து அலசி ஆராய தொடங்கியுள்ளது. அதானி குழுமத்தின் அறிக்கைகளை மறுசீராய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் அதானி குழுமத்தின் பங்கினில் செல்லிங் அழுத்தம் இருந்து வருகின்றது.

வெளியேறும் முதலீட்டாளர்கள்

வெளியேறும் முதலீட்டாளர்கள்

அதானி நிறுவனம் மோசடி செய்து அதன் பங்குகளை ஏற்றம் காண வைத்ததாகவும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டினைம் ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது முன்வைத்தது.

ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் இந்த அறிக்கை வெளியான நிலையில், அதானி குழும நிறுவனங்களில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். இங்கு வாங்குபவர்கள் என யாரும் இல்லை என்றே கூறலாம்.

சர்ச்சைகள் முடிவுக்கு எப்போது?

சர்ச்சைகள் முடிவுக்கு எப்போது?

இதற்கிடையில் அதானி குழுமத்தில் நிலவி வரும் இந்த சர்ச்சைகள் எப்போது முடிவுக்கு வருமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் அதானி குழுமம் அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் உள்ளிட்ட பங்குகள் 20% சரிவினைக் கண்டு, லோவர் சர்க்யூட் ஆகி முடிவடைந்துள்ளது. அதானி பவர் மற்றும் அதானி வில்மர் நிறுவன பங்குகள் 5% சரிவினைக் கண்டு லோவர் சர்கியூட்டில் முடிவடைந்துள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவனமும் 16% சரிவினைக் கண்டும் முடிவடைந்துள்ளது.

7வது இடத்திற்கு சரிந்த அதானி

7வது இடத்திற்கு சரிந்த அதானி

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ-வை அறிமுகப்படுத்தியது. இது 2762.15 ரூபாயாக முடிவடைவதற்கு முன்பு 20% சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் அதானியின் நெட்வொர்த் மதிப்பும் மிக மோசமான சரிவினைக் கண்டு, 4வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். இவரின் நெட்வொர்த் மதிப்பு ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் நிலவரப்படி 92.7 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. சமீபத்திய வாரங்களில் மட்டும் அதானியின் நெட்வொர்த் மதிப்பு 20.8 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவினைக் கண்டுள்லது. இதே கடந்த ஆண்டினை காட்டிலும் 27.9 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.

சென்செக்ஸ் & நிஃப்டி

சென்செக்ஸ் & நிஃப்டி

கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முறையே 2% சரிவினைக் கண்டன. முடிவில் சென்செக்ஸ் 874.16 புள்ளிகள் அல்லது 1.45% சரிவினக் கண்டு, 59,330.90 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 287.60 புள்ளிகள் அல்லது 1.61% சரிவினைக் கண்டு, 17,604.35 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

இனியும் சரியலாம்

இனியும் சரியலாம்

வரவிருக்கும் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சர்வதேச சந்தை நிலவரம், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள், இதன் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வரும் அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் வரும் வாரத்தில் இந்த நிலை தொடரலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.

கடந்த வார நிலவரம்

கடந்த வார நிலவரம்

கடந்த ஜனவரி 23 - 27ம் தேதிகளுக்கு இடையில் அதானி வில்மர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலையானது முறையே சுமார் 7% சரிவிலும், அதானி பவர் பங்கானது 10% சரிவிலும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 20% சரிவிலும், இதே அதானி டிரான்ஸ்மிஷன் 27% சரிவிலும், இதே அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, முறையே 25% மற்றும் 23% சரிவினைக் கண்டுள்ளது.

 

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+