ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் நிறுவனர் நேத்தன் ஆண்டர்சன் தனது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் அதானி குழுமத்தின் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் பங்கு விலை கையாளுதல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கையை வெளியிட்டதன் மூலம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இந்தியாவில் பெரும் புகழ் பெற்றது. அதேவேளையில் இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் வன்மையாக கண்டித்து முற்றிலும் மறுத்தது.

இதன் மூலம் அதானி குழுமம் மீண்டும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்று பங்கு விலை உயர துவங்கியுள்ளது. இப்படியிருக்கையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் மூடப்படும் அறிவிப்பு அதானி குழும முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ள காரணத்தால் இன்று காலை முதல் உயர்வுடன் உள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன தளத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடுவதாக நேத்தன் ஆண்டர்சன் அறிவித்தார். "நாங்கள் ஆய்வு செய்து வந்த நிறுவனங்களின் பணிகளை முடித்த பிறகு நிறுவனத்தை மூட திட்டமிட்டோம்," என்று அவர் கூறினார். கடைசியாக ஆய்வு செய்து வந்த போன்சி திட்டத்தின் ஆய்வறிக்கையை SEC-க்கு சமர்ப்பித்த நிலையில் இன்று நிறுவனத்தை மூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக நேத்தன் ஆண்டர்சன் தெரிவித்தார்.
இந்த செய்தியைத் தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தன. அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் 4.16% உயர்ந்து ரூ.2485க்கு வர்த்தகம் நடைபெற்றது. அதானி போர்ட்ஸ் & எஸ்.இ.ஜெட் 3.61% உயர்ந்து ரூ.1,128.15 ஆகவும், அதானி பவர் 4.79% உயர்ந்து ரூ.549.30 ஆகவும், அதானி எனர்ஜி சாலூஷன்ஸ் 2.5% உயர்ந்து, அதானி கிரீன் எனர்ஜி 4.91% உயர்ந்து, அதானி டோட்டல் கேஸ் 3.8% உயர்ந்து வர்த்தகம் நடைபெற்றது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் மூடல், அதானி குழுமத்தின் பங்கு விலைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது, முதலீட்டாளர்களின் சென்டிமென்ட்-ஐ மாற்றியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications