ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் பல வாரங்களாகத் தொடர்ந்து கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில் பல நாட்களுக்குப் பின்பு அதானி குழுமம் இன்று சிறப்பான வர்த்தக நாள்-ஐ எதிர்கொண்டு உள்ளது என்றால் மிகையில்லை.
அதானி குழுமத்தின் கீழ் பல பெயர்களில் பல நிறுவனங்கள் இருந்தாலும் பங்குச்சந்தையில் இருக்கும் 7 நேரடி அதானி குழும நிறுவனங்கள், 3 கைப்பற்றிய நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு படி தான் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பீடு கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் பிற அமைப்புகள் இணைந்து எடுத்த பல்வேறு நடவடிக்கை கீழ் அதானி குழு பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில் இன்று புதிய முதலீடுகளைப் பெற்றுள்ளது.
அதானி குழு பங்குகள் இன்று பெரிய அளவிலான உயர்வைப் பதிவு செய்யவில்லை என்றாலும் கடந்த 20 நாட்களின் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் அடிப்படை மந்திரமான buy on dip strategy கொண்டு இன்று அதானி குழுமத்தில் பல நிறுவன பங்குகள் மீது முதலீடு குவிந்த காரணத்தால் பல நாட்களுக்குப் பின் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பீட்டில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது.
அதானி குழுமம்
அதானி குழுமத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் குறைவான விலை நிலவரத்தைப் பயன்படுத்தி இன்று கணிசமான முதலீட்டை அதானி குழு பங்குகள் மீது முதலீட்டாளர்கள் செய்துள்ளனர்.
அதானி குழும பங்குகள்
இந்த நிலை தொடருமா என்றால் அதானி குழுமம் மீது ஒவ்வொரு அமைப்புகளும் எடுக்கும் நடவடிக்கை, அதன் வர்த்தகச் செயல்பாடுகள், கடன் அளவை குறைப்பது போன்ற பல காரணிகள் அடிப்படையில் தான் தீர்மானிக்க முடியும்.
MSCI அமைப்பு
இதேவேளையில் MSCI அமைப்பு அதானி எண்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ACC என மொத்தம் 4 அதானி குரூப் நிறுவனங்களின் ப்ரீ ப்ளோட் வெயிட்டேஜ் குறைப்பதாக அறிவித்துள்ளது.
மதிப்பீடு
இந்த நிலையில் MSCI அமைப்புப் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் 2 நிறுவனங்களின் தகுதி குறைப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தது. இதன் மூலம் அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களின் தகுதி குறைப்பை மே பென்ச்மார்க் மறு ஆய்வுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.
தகுதி குறைப்பு மே மாதத்திற்கு ஒத்திவைப்பது
MSCI அமைப்பு பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து அனைத்து அதானி குழும நிறுவனங்களுக்குச் சிறப்புக் கவனிப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. MSCI அமைப்பின் ப்ரீ ப்ளோட் வெயிட்டேஜ் குறைப்பு குறித்தும், இதில் 2 நிறுவனங்களின் தகுதி குறைப்பை மே மாதத்திற்கு ஒத்திவைப்பது குறித்து அதானி குழுமம் இதுவரையில் எவ்விதமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.
அதானி குழும பங்குகள் விலை
MSCI அமைப்பின் அறிவிப்புக்குப் பின்பு அதானி குழு பங்குகளின் தற்போதைய நிலை
அதானி எண்டர்பிரைசஸ் - 1.00 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 1.45 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 4.97 சதவீதம் உயர்வு
அதானி டிரான்ஸ்மிஷன் - 4.93 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 0.69 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 5.00 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 0.55 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 0.99 சதவீத உயர்வு
NDTV - 4.99 சதவீதம் உயர்வு
டிபி பவர் நிறுவன டீல்
அதானி பவர் நிறுவனம் சுமார் 7,017 கோடி ரூபாய் மதிப்பிலான டிபி பவர் நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இந்தப் பரிவர்த்தனையை நிறைவு செய்யும் காலக்கெடு முடிவடைந்தது. இதனால் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக டிபி பவர் நிறுவனத்தைக் கையகப்படுத்துவதில் இருந்து அதானி பவர் வெளியேறியுள்ளது.
இதனால் அதானி குழுமம் புதிதாகக் கடன் வாங்குவதைத் தவிர்த்துள்ளது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications