அதானி குழுமம் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு மத்தியில் அதானி குழும பங்குகள் கடந்த சில வாரங்களாகவே கடும் சரிவினைக் கண்டு வந்தன. இதற்கிடையில் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அதானி குழுமம் எடுத்து வருகின்றது.
இந்த நிலையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்றமும், அதானி குழுமம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து, 2 மாதத்திற்குள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சந்தைக்கு ஆதரவு
இதற்காக 6 பேர் அடங்கிய ஒரு குழுவினையும் நியமித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக கூறிய கெளதம் அதானி, விரைவில் பிரச்சனைக்கு முடிவு காணலாம். உண்மையே வெல்லும் எனும் கூறியிருந்தார். இதுவே சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டது.
புதிய முதலீடு அப்டேட்
இதற்கிடையில் அதானி குழுமத்தில் 15,000 கோடி ரூபாய்க்கு மேலாக முதலீடு செய்ய ராஜீவ் ஜெயின் என்பவரின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு சாதகமான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து 4வது நாளாக சந்தைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.
ரூ.15,000 கோடி முதலீடு
அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்ட GQG partners நிறுவனம் தான் இந்த அறிவிப்பினை கொடுத்துள்ளது. இந்த நிறுவனம் அதானி குழுமத்தில் 15,446 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதானி குழும பங்குகள் பலவும் அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளன.
அப்பர் சர்க்யூட் ஆன பங்குகள்
குறிப்பாக அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர், அதானி பவர் மற்றும் என்டிடிவி உள்ளிட்ட பல பங்குகளும் 5% அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளன. இதே அதானி போர்ட்ஸ் நிறுவனம் 7% மேலாக ஏற்றம் கண்டு, 669 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
சந்தை மதிப்பு
அதானி குழுமத்தின் மற்ற பங்குகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. தொடர்ந்து 4வது நாளாக ஏற்றத்தில் காணப்பாடும் அதானி குழும பங்குளினால் அதன் சந்தை மதிப்பு கடந்த இரண்டு திட்டங்களுக்கு முன்பே 74000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
கடன் எல்லாம் முதலீடு
அமெரிக்க நிறுவனத்தின் இந்த ஒப்பந்தமானது, ஹிண்டர்ன்பர்க் அறிக்கை வந்த நிலையில் வந்துள்ளது இன்னும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிலும் ஹிண்டர்ன்பர்க் பிரச்சனை ஒரு பிரச்சனையே அல்ல, அதானி குழுமம் வாங்கிய கடன் அனைத்தும் மும்பை விமான நிலையம் உள்பட பல்வேறு விமான நிலையங்களில் முதலீடு செய்துள்ளன. துறைமுகங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.
GQG partnersபங்குகள் சரிவு
அதானி குழுமம் என்னதான் சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. எனினும் அதானி குழுமத்தியில் முதலீடு செய்வதாக அறிவித்த நிலையில் GQG partners பங்கு விலையானது ஆஸ்திரேலிய சந்தையில் சரிவினைக் கண்டுள்ளது.
இப்போதும் சரிவு தான்
எப்படியிருப்பினும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு இதுவரையில் 10 லட்சம் கோடி ரூபாய் சரிவில் தான் காணப்படுகின்றது. இது ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியானத்தில் இருந்து அதன் மொத்த சந்தை மதிப்பில் 57% சரிவில் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications