இலங்கை அரசு அதிகாரிகள் தற்போது இந்திய தொழிலதிபரான கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்துடன் இணைந்து அந்நாட்டின் விமான நிலையங்களை நிர்வகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக, இலங்கை சுற்றுலா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களை நிர்வகிப்பதற்காக அதானி குழுமத்துடன் இணைந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பெர்னாண்டோ கூறினார்.

தற்போது இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் இந்திய வர்த்தக நிறுவனத்துக்கு கொழும்பின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட மூன்று விமான நிலையங்கள் வழங்கப்படுகின்றன.
1970 இல் திறக்கப்பட்ட இலங்கையின் முதன்மையான சர்வதேச நுழைவாயில், நான்காவது பிரதமரான சாலமன் பண்டாரநாயக்காவின் பெயரிடப்பட்டது.
மற்ற இரண்டு விமான நிலையங்கள் ரத்மலானை விமான நிலையம் (கொழும்பில் உள்ளது) மற்றும் மத்தள விமான நிலையம் ஆகும். 2017 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் 'உலகின் காலியான சர்வதேச விமான நிலையம்' என்று பெயரிடப்பட்டது, ஏனெனில் இங்கு வசதிகள் பெரியதாக இருந்தாலும் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் வந்து சென்றன.
இலங்கை சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் நேரத்தில் அந்நாட்டின் விமான நிலையங்களை நிர்வக்க ஒரு தனியார் கூட்டாளரை இணைத்துக்கொள்ளும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. 2023 இல் 1.48 மில்லியன் (14.8 லட்சம்) பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.
அதானி குழுமம் தற்போது இந்தியாவில் எட்டு விமான நிலையங்களை நிர்வகித்து வரும் நிலையில், இலங்கையுடனான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், அதன் முதல் வெளிநாட்டு விமான நிலைய நிர்வாகமாக இருக்கும்.
அதானி குழுமம் இந்தியாவில் துறைமுகங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில், கொழும்பில் உள்ள மேற்கு கொள்கலன் முனையத் திட்டத்துக்காக 553 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 4600 கோடி) நிதியைப் பெற்றுள்ளது. அமெரிக்க சர்வதேச வளர்ச்சியில் இருந்து வரும் நிதியுடன் இந்த திட்டத்தை அதானி நிறுவனம் செயல்படுத்து உள்ளது.
2024 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் (23 லட்சம்) சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளோம். இந்த இலக்கை அடைவோம் என்று நாங்கள் நம்புகிறோம். 2030க்குள், நான்கு மில்லியன் பயணிகளை ஈர்ப்போம் என்று நம்புகிறோம். அதனால்தான் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது என்று இலங்கை அமைச்சர் பெர்னாண்டோ கூறினார்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications