அதானி குழுமத்தின் ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டுகளுக்கு இறுதி தீர்வுகளைக் காண சுப்ரீம் கோர்ட் தீவிரம் காட்டி வரும் வேளையில், பல வர்த்தகத்தை விற்பனை செய்து அதிக லாபம் கொடுக்கும் துறையில் முதலீடு செய்வதோடு, புதிய துறையிலும், சந்தைகளிலும் அதானி குழுமம் நுழையத் திட்டமிட்டு வருகிறது.
அதானி குழுமம் புதிய வர்த்தகச் சந்தையில் நுழைய முக்கிய நம்பிக்கையைக் கொடுத்தது முதலில் ஆஸ்திரேலியா நாட்டின் நிலக்கரி ஒப்பந்தம், அதன் பின்பு பங்களாதேஷ் நாட்டிற்கான மின்சார ஏற்றுமதி தான், அதைத் தொடர்ந்து இஸ்ரேல் வடக்குப் பகுதியில் மிகவும் முக்கியமான துறைமுகமாக இருக்கும் ஹைஃபா துறைமுகத்தைக் கைப்பற்றியது தான்.

இந்த 3 திட்டங்கள் தான் அதானி குழுமம் சர்வதேச அளவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் வாய்ப்பை பெரியதாகப் பார்க்கத் துவங்கியது. இதைத் தொடர்ந்து இலங்கை பொருளாதாரம் திவாலானதில் இருந்து அதானி குழுமம் அந்நாட்டில் முதலீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் இலங்கை தலைநகரான கொழும்பில் அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ டீப்வாட்டர் வெஸ்ட் கண்டைனர் டெர்மினல் கட்டுமான திட்டத்தைச் செயல்படுத்தி வரும் வேளையில் இத்திட்டத்திற்குச் சுமார் 533 மில்லியன் டாலர் அளவிலான நிதியை அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதியியல் அமைப்பு வாயிலாக அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை உடைக்கும் நோக்குடன் இந்த முக்கியமான திட்டத்திற்கு அமெரிக்கா முதலீடு செய்ய உள்ளது. இதோடு இலங்கை நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அதானி கிரீன் நிறுவனம் அந்நாட்டின் மின்சாரத் துறையில் சுமார் 750 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டைச் செய்ய உள்ளதாகக் கரண் அதானி தெரிவித்தார்.
இப்படி இலங்கையில் தனக்கென முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் அதானி குழுமம் அடுத்த 20 வருடத்திற்கு இந்நாட்டில் வர்த்தகத்திலும், வளர்ச்சியிலும் தொடர்ந்து முதலீடு செய்யும் இலக்கை கொண்டு உள்ளது. இப்படியிருக்கையில் ஒரு இந்திய நிறுவனத்தின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு அமெரிக்கா முதலீடு செய்துள்ளதைச் சர்வதேச ஒத்துழைப்பு அளிப்பதைக் காட்டுகிறது எனக் கரண் அதானி தெரிவித்தார்.
இதோடு கரண் அதானி, அதானி குழுமம் தற்போதைய வெளிநாட்டு வர்த்தகமான இலங்கை, இஸ்ரேலை தாண்டி, விரைவில் பங்களாதேஷ், வியட்நாம், தான்சானியா ஆகிய நாடுகளில் முதலீடு செய்யும் வாய்ப்புகளைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளார். அதானி குழுமம் இந்தியாவில் எப்படி விரிவாக்கம் செய்கிறதோ, அதேபோல் வெளிநாடுகளிலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது என தெரிவித்தார்.
மேலும் அதானி குழுமம் தற்போது வெளிநாட்டு முதலீடுகள் மூலம் டார்கெட் செய்யும் நாடுகள் அனைத்தும் சீனா-வின் கடன் வலையில் சிக்கியிருக்கும் நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் கடன் வலையை நேரடியாகவும், மறைமுகமாகவும் பல முறை விமர்சனம் செய்துள்ள அதானி குழுமத்திற்குச் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க நினைக்கும் அமெரிக்கா பக்க பலமாக இருக்க உள்ளது.
சமீபத்தில் உலக நாடுகளில் சீனா சார்பில் வரும் கட்டமான விண்ணப்பங்களை ஏற்பதைக் குறைந்துள்ளது. இந்தக் கேப்-ஐ பயன்படுத்திக்கொள்ள அதானி குழுமம் முயற்சி செய்வதாகத் தெரிகிறது. ஆனால் சீன அரசு அந்நாட்டு வங்கிகள், நிறுவனங்கள், நிதி அமைப்புகள், முதலீட்டு வாரியங்கள் வாயிலாக 165 நாடுகளுக்கு 1.1 டிரில்லியன் டாலர் அளவிலான பணத்தைக் கடனாகக் கொடுத்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications