அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி தலைமையிலான நிறுவனங்கள், அனைத்து அதானி குழும பங்குகளின் ஆதரவுடன் கடன்களை முன்கூட்டியே செலுத்தி வருவதாக லண்டனில் நடந்த கூட்டத்தில் முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளது.
இது முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையின்மையை குறைக்கும். நம்பிக்கையை அதிகரிக்கலாம். முதலீட்டாளர்களின் கவலையை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் நடவடிக்கை
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியான நிலையில், அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டு வந்தன. இதனை தடுக்க அதானி குழுமம் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நிதிகளை திரட்டுதல், கடனை அடைத்தல், குறிப்பாக முன் கூட்டியே கடனை அடைத்தல் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
நம்பிக்கை அதிகரிக்க திட்டம்
இந்த நிலையில் லண்டனில் நடந்த ஒரு கூட்டத்திக் அதானி குழும உயர் அதிகாரிகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக முன் கூட்டியே கடனை அடைத்தது குறித்து தெரிவித்துள்ளனர்.
அதானி குழுமத்தின் இத்தகைய அறிவிப்புகளுக்கு மத்தியில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன.
எதற்காக இந்த கடன்?
குறிப்பாக 500 மில்லியன் டாலர் கடனை முன் கூட்டியே சில தினங்ளுக்கு முன்பும் செலுத்தியுள்ளது. இது மேற்கொண்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த தொகையானது கடந்த செவ்வாய்கிழமையன்று விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் ஆனது அதானி குழுமம் அண்மையில் வாங்கிய ஏசிசி சிமெண்ட் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் என சில நிறுவன பங்குகள் வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நம்பிக்கையை அதிகரிக்க கூட்டம்
இதன் மூலம் அதானி குழுமம் நிச்சயம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை திரும்ப பெற முடியும் என அதானி குழுமம் நம்புகின்றது. இதற்கிடையில் தான் இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த லண்டனில் ஒரு நிகழ்ச்சியினையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங், துபாய், லண்டன், மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
GQG பார்ட்னர்ஸ்
இந்த நம்பிக்கையை மேற்கொண்டு அதிகரிக்கும் விதமாக அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்ட GQG பார்ட்னர்ஸ் 4 அதானி குழும பங்குகளை 1.87 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளது. இதில் அதானி போர்ட்ஸ் & செஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன் என பல பங்குகளும் அடங்கும்.
மேற்கொண்டு அதிகரிக்கலாம்
GQG பார்ட்னர்ஸ் இந்த முதலீட்டினை மேற்கொண்டு அதிகரிக்கலாமோ என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. அதானி குழும முதலீடுகள் குறித்து தனது முதலீட்டாளர்கள் நேர்மறையான பதில்களை தெரிவித்துள்ளதாகவும், இது அதானி குழும முதலீட்டாளர்களுக்கு நேர்மறையான ஒரு அறிவிப்பாக இருக்கும். அதோடு அதானி குழும பங்குகள் ஏற்றம் காணவும் இது வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications