இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமம், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் இந்தியா மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகளில் அடுத்தடுத்து முதலீடு செய்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுளின் முக்கியமான திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகுளுடன் அதானி குழுமம் முதல் முறையாக இணைகிறது. இந்த கூட்டணி இந்தியாவில் கிளவுட் சேவையை மிகவும் பசுமையான முறையில் சுற்றுச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாத வகையில் வழங்க வேண்டும் என்ற முக்கிய குறிக்கோள் உடன் இணைந்துள்ளது.

அதானி குழுமம், கூகுளின் கிளவுட் சேவைகள் மற்றும் இந்தியாவில் உள்ள அலுவலர்களையும், செயல்பாடுகளை இயக்க கிரீன் எனர்ஜி அதாவது கிரீன்ஹவுஸ் வாயு வெளியிடாத வகையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
இந்த புதுப்பிக்கத்தக்க எனர்ஜியை, அதானி குழுமம் குஜராத்தில் அமைத்திருக்கும் 30 ஜிகா வாட் (GW) காவ்டா ரினிவபிள் எனர்ஜி பார்க்-ல் உள்ள புதிய லோலார் - விண்ட் ஹைப்ரிட் திட்டத்திலிருந்து சப்ளை செய்யப்பட உள்ளது. இந்த லோலார் - விண்ட் ஹைப்ரிட் திட்டம் 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் முதல் தனது நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், முன்கூட்டியே இதற்கான பிஸ்னஸை அதானி குழுமம் பெற்றுள்ளது.
இதேவேளையில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் 2030ஆம் ஆண்டிற்குள் தனது அனைத்து கிளவுட் செயல்பாடுகளையும், சேவைகளையும் ரினிவபிள் எனர்ஜி மூலம் இயக்க வேண்டும் என்ற முக்கியமான இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடையவே தற்போது அதானி குழுத்துடன் இணைந்துள்ளது கூகுள்.
கூகுள் மட்டும் அல்லாமல் உலகின் டாப் 500 நிறுவனங்கள் கொண்ட பார்சூன் 500 நிறுவனங்கள் அனைத்தும் தனது செயல்பாடுகளில் ரினிவபிள் எனர்ஜியை அதிகமாகப் பயன்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனாலேயே கிரீன் எனர்ஜி துறையில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் அதிகப்படியான வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது.
கூகுளின் கிளவுட் செயல்பாடுகளுக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குவதோடு கூடுதலாக, அதானி குழுமம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மட்டுமே பயன்படுத்தி இயக்கப்படும் டேட்டா சென்டர்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications