அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னணி விமான ஆப்ரேட்டராக மாறுவதை இலக்காக கொண்டுள்ளது. இன்னும் நாட்டில் அதிகமான விமான நிலையங்களை ஏலத்தில் எடுக்கும் என அறிவித்துள்ளது.
இது குறித்து அதானி ஏர்போர்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அருண் பன்சால் தெரிவித்துள்ளார்.
விமான நிலைய தனியார்மயமாக்கலில் கடைசியாக ஆறு விமான நிலையங்களை இயக்க அதானி ஏர்போர்ட்ஸ் ஏலத்தில் எடுத்தது. இது இனியும் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது.
நவி மும்பை
அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் சில விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படலாம் என தெரிகிறது. மேலும் அதானி குழுமம் இந்திய சந்தையில் வளர்ச்சி பாதையில் உள்ளது. ஆக அதிக விமான நிலையங்களை இயக்க விரும்புவதாகவும் பன்சால் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஏலத்தில் எடுத்த முதல் கட்டமாக நவி மும்பை விமான நிலையம் டிசம்பர் 2024-க்குள் செயல்படத் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
எவ்வளவு மக்கள்?
முதல் கட்டமாக தொடங்கும் இந்த நவி மும்பை விமான நிலையைத்தில் 20 மில்லியன் மக்களை கையாளும் திறன் கொண்டதாக இருக்கலாம்.
அதானி போர்ட்ஸ் விமான இன்ஸ்டிடியூட் அமைப்பதில் ஈடுபட்டு வருவதாக பன்சால், விமான போக்குவரத்து மைய உச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
செலவு குறைய வேண்டும்
நிலவி வரும் பணவீக்கத்தின் மத்தியில் விமான நிலையங்களை இயக்குவதற்கான செலவு 30 - 50% வரையில் குறைய வேண்டும். அதே சமயம் வளர்ச்சி விகிதத்தினை உயர்த்திக் காட்டுவதாகவும் அருண் பன்சால் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 - 30 ஆண்டுகளாக இந்திய விமானப் போக்குவரத்து சாதாரணமாக என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
வளர்ச்சி ஊக்குவிப்பு
அதானி ஏர்போர்ட்ஸ் தொடர்ந்து பிசிகல் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியினை ஊக்குவித்து வருவதாகவும், அதன் திறனை அதிகரிக்கும் உள்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது குற்றம் சாட்டினாலும், அடுத்தடுத்த வளர்ச்சிக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது மேற்கோண்டு அதானி குழும நிறுவனங்களின் வளர்ச்சியினை ஊக்குவிப்பதாக அமையலாம்.


Click it and Unblock the Notifications