இந்தியாவுக்கு வந்த அமெரிக்க உபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாரா கொஸ்ரோஷாஹி உடன் பிப்ரவரி 24ஆம் தேதி ஆதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது, ஆதானி குழுமத்தின் எலக்டரிக் கார்களை உபர் டாக்சி சேவையில் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், ஆதானி குழுமம் 2022ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட "அதானி ஒன்" தளத்தில் கீழ் இந்தக் கூட்டணியின் சேவைகள் கொண்டு வரப்படும். இந்தத் தளம் விமான டிக்கெட் முன்பதிவு, விடுமுறை சுற்றுலா பேக்கேஜ் மற்றும் டாக்சி முன்பதிவு போன்ற சேவைகளை வழங்குகிறது.

இக்கூட்டணி முயற்சிகள் உறுதியாகும் பட்சத்தில் அதானி ஒன் திட்டத்தின் கீழ் உபர் சேர்க்கப்பட உள்ளது, அதானி ஒன் சேவைகள் அதானி குழுமம் நிர்வாகம் செய்யும் விமான நிலையத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இணைப்பு மூலம் அதானி குழுமம் தனது விமான நிலைய பயணிகளுக்குத் தன்னுடைய சொந்த எலக்ட்ரிக் கார்கள் மூலம் டாக்சி சேவை அளிக்கும்.
ஆதானி குழுமத்திற்கு இந்தக் கூட்டணி எவ்வாறு உதவும்?: அகமதாபாத் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அதானி குழுமம் நாட்டின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு நிறுவனமாக விளங்குகிறது. அதானி குழுமம் எலக்ட்ரிக் பயணிகள் வாகன பிரிவில் நுழைய இலக்கு வைத்திருந்த நிலையில் உபர் உடனான கூட்டணி, இந்த இலக்கை விரைவாகச் செயல்படுத்துவதற்கு உதவியுள்ளது.
அதானி குழுமம் ஏற்கனவே வர்த்தக ரீதியாக எலக்ட்ரிக் வாகன பிரிவில் பேருந்துகள், வேன்கள் மற்றும் லாரிகளை வழங்குகிறது. மேலும், ஆதானி குழுமம் வாகன உற்பத்தியில் ஈடுபடவில்லை என்றாலும், அதன் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பெரிய தேவை உள்ளது.
இதன் அடிப்படையில், ஆதானி குழுமம் எலக்ட்ரிக் கார்களை வாங்கி, அவற்றைத் தங்கள் பிராண்ட் பெயரில், உபர் நெட்வொர்க்கில் இணைக்கும். சமீபத்தில், அரசாங்கம் வெளியிட்ட 3600க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகளுக்கான டெண்டர்களில் ஆதானி குழுமமும் ஏலம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது.
உபருக்கு இந்தக் கூட்டணி எவ்வாறு உதவும்?: இந்தக் கூட்டணி, உலகம் முழுவதும் தங்கள் இருக்கும் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கான உபரின் இலக்கை அடைய உதவும். 2040ஆம் ஆண்டுக்கு முன்பு "பூஜ்ஜிய உமிழ்வுப் போக்குவரத்துத் தளமாக" மாறுவதற்கான தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்தக் கூட்டணி உதவும்.


Click it and Unblock the Notifications