வேதாந்தா, பிர்லா, டாடா-வுக்கு, போட்டியாக புதிய துறையில் களமிறங்கும் கௌதம் அதானி..!

கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம், இந்தியாவில் மெட்டல் தொழிலில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த தொழிலில் 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் அதானி குழுமம் சிமெண்ட் துறையில் கால் பதித்தது. தற்போது இந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக அது உருவெடுத்துள்ளது. தற்போது மெட்டல் தொழிலிலும் களமிறங்க உள்ளது.

வேதாந்தா, பிர்லா, டாடா-வுக்கு, போட்டியாக புதிய துறையில் களமிறங்கும் கௌதம் அதானி..!

இதன்மூலம் அனில் அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தா குழுமம், ஆதித்யா பிர்லாவின் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா குழுமங்களுக்கு போட்டியாக அதானி குழுமம் உருவாக இருக்கிறது.

அதானிக்கு சொந்தமான நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனம் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இரும்பு , ஸ்டீல் மற்றும் காப்பர் , அலுமினியம் ஆகியவற்றை தோண்டி எடுப்பது மற்றும் அதனை பயன்படுத்தும் பொருளாக மாற்றுவது ஆகிய தொழிலில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஐந்து பில்லியன் டாலர்களை அதானி குழுமம் முதலீடு செய்ய இருக்கிறது. இதில் இரண்டு பில்லியன் டாலர்கள் காப்பர் தொழிலுக்கும் மூன்று பில்லியன் டாலர்கள் மற்ற மெட்டல்களுக்கும் பயன்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படித்தான் முதன்முறையாக அதானி குழுமம் சிமெண்ட் துறையில் 2022ஆம் ஆண்டில் கால் பதித்தது. அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தை நிறுவனத்தையும் ஏசிசி லிமிடெட் நிறுவனத்தையும் 6.62 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. தற்போது சிமெண்ட் உற்பத்தியில் தவிர்க்க முடியாத நிறுவனமாக உருவாகியுள்ளது. அதேபோல தான் தற்போது தற்போது மெட்டல் துறையிலும் நுழைகிறது.

தற்போது தங்களுடைய புதுப்பிக்க எரிசக்தி திட்டங்களான சோலார் மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்திக்கு அதானி குழுமம் அலுமினியம் டஸ்டுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. தாங்களே இந்த தொழிலில் ஈடுபட்டால் இதனை இறக்குமதி செய்ய வேண்டிய வேலையோ அல்லது பணம் கொடுத்து வாங்க வேண்டிய தேவையோ இருக்காது என்பதால் அதானி இப்படி ஒரு திட்டத்தை தீட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டிலேயே அதானி குழுமம் ஒடிசா மாநிலத்தில் அலுமினியம் ஆலையை நிறுவுவதற்கு அனுமதி வாங்கியது ஆனால் இதுவரை அந்த தொழில் தொடங்கவில்லை. அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இது தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் அலுமினியம் தொழில்கள் செய்யும் முதலீட்டில் 25 சதவீதம் வரை லாபம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது வேதாந்தா, இண்டால்கோ, ஜேஎஸ்டபிள்யூ, டாடா ஆகியவை தான் இந்த துறையில் கொடிகட்டு பறக்கும் நிறுவனங்களாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+