அதானியின் புதிய வணிகம்.. இது வேற லெவல் திட்டம்..!

அதானி குழுமத்தின் மூலம் சுரங்கம், விமானம், பவர் செக்டார், துறைமுகம் என பல்வேறு வணிகங்களில் கோலேச்சி வரும் கெளதம் அதானி தற்போது ஒரு புதிய வணிகத்தில் நுழைந்துள்ளார்.

இது மேற்கொண்டு அவரின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாக இருந்து வரும் அதானி குழுமம், சமீபத்திய காலமாக அசுர வளர்ச்சியினை கண்டு வருகின்றது.

குறிப்பாக ஆசியாவின் முன்னணி பணக்காரராக இருந்து வரும் முகேஷ் அம்பானியின் வருமானத்தினை விட, நடப்பு ஆண்டில் அதிகம். அந்தளவுக்கு இவரின் வணிக வளர்ச்சி விகிதமானது உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது.

அதானி குழுமத்தில் அசுர வளர்ச்சி

அதானி குழுமத்தில் அசுர வளர்ச்சி

இந்த நிலையில் தான் தற்போது அதானி குழுமம் பல்வேறு துறைகளில் புதியதாக கால் பதித்து வருகின்றது. பல்வேறு நாடுகளில் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றது. மொத்தத்தில் இந்தியா மட்டும் அல்ல, பல்வேறு நாடுகளில் தனது சேவை மூலம் வெற்றிக் கொடியை சுவைத்து வருகின்றது. பல்வேறு நாடுகளில் விரிவாக்கம் செய்தும் வருகின்றது. இது மேற்கொண்டு அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கு பெரும் துணை புரியலாம்.

அதானி குழுமத்தில் இணைப்பு

அதானி குழுமத்தில் இணைப்பு

அதானி குழுமத்தில் உள்ள அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், அதன் துணை நிறுவனமான முந்த்ரா அலுமினியம் லிமிடெட் நிறுவனத்தினை முழுமையாக இணைத்துக் கொண்டுள்ளது. இந்த முந்த்ரா அலிமினியம் நிறுவனம் இன்னும் தனது வணிகத்தினை தொடங்கவில்லை எனலாம். எனினும் விரைவில் இதன் பணியினை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதற்காக இந்த இணைப்பு

எதற்காக இந்த இணைப்பு

முந்த்ரா அலுமினியம் லிமிடெட் நிறுவனம் அலுமினியம் சுத்திகரிப்பு மற்றும் அலுமினியம் ஸ்மெல்ட்டர் வணிகத்தினையும் செய்து வருகின்றது, இவ்வணிக்கத்தினை மேம்படுத்தும் விதமாகத் தான் அதானி குழுமம், அதானியுடன் முந்த்ராவை இணைத்துள்ளதாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பல்வேறு புதிய நிறுவனங்கள்

பல்வேறு புதிய நிறுவனங்கள்

நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பில்லியனர்களில் ஒருவரான கெளதம் அதானி குழுமம், சமீபத்திய காலமாக பல்வேறு புதிய துறைகளில் காலூன்றி வருகின்றது. கடந்த ஜூன் மாதத்தில் சிமெண்ட் வணிகத்தினை மேம்படுத்த திட்டமிட்டு, அதானி சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தினை கையகப்படுத்தியது. இதே போன்று ஆகஸ்ட் மாதத்தில் அதன் சுத்திகரிப்பு வணிகம், கெமிக்கல்ஸ் ஹைட்ரஜன் தொடர்பான வணிகங்களை அதானி பெட்ரோ கெமிக்கல்ஸ் வணிகத்துடன் இணைத்தது. இதனை ஒரு தனி நிறுவனமாகவும் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+