சென்னை: இந்திய வரலாற்றில் இதுவரையில் எந்தொரு வர்த்தகக் குழுமம் செய்திடாத வகையில் மிகவும் குறுகிய காலகட்டத்தில் அதானி குழுமம் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஆனால் இதேவேளையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட ஒரு அறிக்கை மூலம் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 15 நாளில் பாதியாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில் நிக்கி ஏசியா அமைப்பின் அதானி குழுமத்தின் கடன் அளவை கணக்கிட்டு வெளியிட்டு உள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் கூட அதானி குழுமம் அதிகப்படியான கடனில் இருப்பதாக அறிவித்த நிலையில் அதானி குழுமம் பல கடன்களை அடுத்தடுத்து குறைத்து வருகிறது. அதிலும் முக்கியமாக 9000 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை அடமானம் வைத்து வாங்கியிருந்ததை முன்கூட்டியே திருப்பியுள்ளது.
நிக்கி ஏசியா
நிக்கி ஏசியா வெளியிட்ட ஆய்வு முடிவுகள் படி அதானி குழுமத்தின் மொத்த கடன் அளவு 41.1 பில்லியன் டாலர் இந்தியா ரூபாய் மதிப்பில் இதன் அளவு 3.39 லட்சம் கோடி ரூபாய். மேலும் இது இந்தியப் பொருளாதாரத்தின் 1 சதவீதம் என அறிவித்துள்ளது நிக்கி ஏசியா.
அதானி குழுமம்
அதானி குழுமத்தின் கீழ் இருக்கும் 7 நிறுவனங்கள் மற்றும் சமீபத்தில் கைப்பற்றிய ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ், NDTV என மொத்தம் 10 நிறுவனங்களின் மொத்த கடன் அளவு தான் இந்த 3.39 லட்சம் கோடி ரூபாய். நிக்கி ஏசியா அமைப்பு அதானி குழுமம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாங்கிய கடனை சேர்த்து கணக்கிட்டு உள்ளது.
1.2 சதவீத ஜிடிபி
இந்தியாவின் நாமினல் ஜிடிபி அளவு அக்டோபர் இறுதியில் 273 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது எனச் சர்வதேச நாணய நிதியம் அறிவித்து இருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் இந்தியா ஜிடிபியில் 1.2 சதவீதத்தை அதானி குழுமம் கடனாகப் பெற்றுள்ளது என நிக்கி ஏசியா தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
10 நிறுவனங்கள்
அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் மொத்த ஈக்விட்டி ரேஷியோ வெறும் 25 சதவீதம் மட்டுமே, அதிலும் குறிப்பாக மார்ச் 2022 தரவுகள் படி அதானி கிரின் எனர்ஜி ஈக்விட்டி ரேஷியோ வெறும் 2 சதவீதம் என நிக்கி ஏசியா தெரிவித்துள்ளது. ஈக்விட்டி ரேஷியோ என்பது ஒரு நிறுவனம் எந்த அளவுக்குக் கடன்களை நம்பியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஈக்விட்டி ரேஷியோ எப்போதும் அதிகமாகவே இருக்க வேண்டும்.
மொத்த சொத்து மதிப்பு
இதேவேளையில் அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு 4.8 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, சொத்து மதிப்பை தாண்டி கடன் வாங்கவில்லை என்றாலும் கடன் அளவு அதிகமாக இருப்பது முதலீட்டாளர்களுக்குப் பெரும் உறுத்தலாக உள்ளது. இதைச் சரி செய்யும் வண்ணம் அடுத்தடுத்துக் கடனை அடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அதானி குழுமம்.
ஹிண்டன்பர்க் அறிக்கை
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் 7 அதானி குழு பங்குகளின் விலை பெரிய அளவில் சரிந்த நிலையில் சுமார் 100 பில்லியன் டாலருக்கும் அதிகளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்தது. இதைத் தொடர்ந்து அதானி குழுமம் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான FPO திட்டத்தையும் ரத்து செய்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications