சமீபத்திய காலமாக இந்தியாவில் அதானி குழும நிறுவனங்கள் விஸ்வரூப வளர்ச்சி கண்டு வருகின்றன. குறிப்பாக கடந்த ஆறு மாத காலகட்டத்தில் அதானி குழுமத்தின் வளர்ச்சி விகிதமானது, 88.1% வளர்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து பர்கண்டி ரைவேட் ஹூருன் இந்தியா 500-ன் சிறப்பு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் முதல் 500 நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமானது 2% மட்டுமே அதிகரித்துள்ளது.
யார் முதலிடம்
இதே வழக்கமாக அதானியை விட முன்னிலையில் இருக்கும் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 13.4% வளர்ச்சி கண்டு, 18.87 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் மதிப்பு 0.9% அதிகரித்து, 12.97 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து 2வது இடத்திலும் உள்ளது. அதனை தொடர்ந்து ஹெச் டி எஃப் சி வங்கி, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை உள்ளன.
அரசு சாரா முதல் 500 நிறுவனங்கள்
ஆக்ஸிஸ் வங்கியின் வணிகமான பர்கண்டி பிரைவேட் மற்றும் ஹூருன் இந்தியா இணைந்து இந்த பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 என்ற லிஸ்டினை வெளியிட்டுள்ளன, இது இந்தியாவில் உள்ள மதிப்புமிக்க அரசு சாரா நிறுவனங்களின் பட்டியலில் முதல் 500 நிறுவனங்களின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கும். இது கடந்த அக்டோபர் 30, 2021 முதல் ஏப்ரல் 30, 2022 வரை கண்காணிக்கப்படுகின்றது.
அதானி கிரீன் எனர்ஜி & அதானி பவர்
அதானி கிரீன் எனர்ஜி 2,62,238 கோடி ரூபாயில் இருந்த மதிப்பு, 4,50,874 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த 6 மாத காலகட்டத்தில் 139% ஏற்றம் கண்டுள்ளது.
இதே அதானி பவரின் மதிப்பு 157.8% அதிகரித்து, 1,08,129 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. (66,185 கோடி ரூபாய்)
அதானி வில்மர் & அதானி டோட்டல் கேஸ்
அதானி வில்மரின் மதிப்பானது 189.8% அதிகரித்து, 1,01,427 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. (66,427 கோடி ரூபாய்)
அதானி டோட்டல்ஸ் கேஸ் மதிப்பானது 1,07,3256 கோடி ரூபாய் அதிகரித்து, 2,69,558 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன் & அதானி எண்டர்பிரைசஸ்
இதே அதானி டிரான்ஸ்மிஷன் மதிப்பானது 1,00,660 கோடி ரூபாய் அதிகரித்து, 3,06,792 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதிப்பானது 93,557 கோடி ரூபாய் அதிகரித்து, 2,65,848 கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
அம்பானியா Vs அதானியா
மொத்தத்தில் அதானி குழுமத்தில் உள்ள மொத்தம் நிறுவனங்களின் மொத்த மதிப்பு 17.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 500 நிறுவனங்காளின் மொத்த மதிப்பில் இது 7.6% ஆகும்.
மொத்த அதானி குழும நிறுவனங்களின் மதிப்பும் கணிசமான வளர்ச்சியினை எட்டியிருந்தாலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 13.4% வளர்ச்சி கண்டு, 18.87 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மொத்த மதிப்பில் பார்க்கும்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமே முதலிடம் பிடித்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications