சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் மிகவும் முக்கியமானதும். பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தை அளித்து வரும் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மொத்த கடனில் உள்நாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு 36% ஆக உயர்ந்துள்ளது என்ற முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
அதானி குழுமத்தின் வேகமான வளர்ச்சிக்கு இணையாக இந்த வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் கடனும் பெரிய அளவுக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதானி குழுமம் அதன் நிறுவனங்களின் பங்குகளை அடமானம் வைத்து உள்நாட்டு வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் அதிகளவில் கடன் வாங்குவது கடந்த 2 வருடமாக முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதானி குழுமத்தின் மொத்த கடனில் சுமார் 36 சதவீதம் உள்நாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. 2023-24ம் நிதியாண்டில் அதானி குழுமத்தின் மொத்த கடன் அளவு 5 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. அதானி குழுமத்தின் சில முக்கியமான வர்த்தக பிரிவில் செய்யப்பட்ட விரிவாக்கம், முதலீடுகள் காரணமாகக் கடன் அதிகரித்துள்ளது.
மார்ச் 31, 2024 முடிவில் இதுவரையில் இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்திற்கு மொத்தம் ரூ. 88,100 கோடி கடன் வழங்கியுள்ளன. இது அதானி குழுமத்தின் மொத்த கடன் அளவான ரூ. 2,41,394 கோடியில் சுமார் 36% ஆகும்.
மார்ச் 31, 2023 முடிவின் தரவுகளைப் பார்க்கும்போது, உள்நாட்டுத் தனியார் - அரசு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்திற்கு சுமார் ரூ.70,213 கோடி கடன் வழங்கியிருந்தது. அப்போதைய நிலையில் இக்குழுமத்தின் மொத்த கடன் இருப்பான ரூ.2,27,248 கோடியில் உள்நாட்டு வங்கிகளின் கடன் பங்கீடு 31% ஆகும். இதன் மூலம் ஒரு வருடத்தில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கனரா பேங்க், HDFC பேங்க், ஆக்சிஸ் பேங்க் மற்றும் ICICI பேங்க் உள்ளிட்ட வங்கிகள் அதானி குழுமத்திற்கு கூடுதலான கடன்களை அளித்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் இருப்பது நாட்டு மக்களின் பணம் என்பதால் ஹிண்டன்பர்க் பிரச்சனைக்கு மத்தியில் அதானி குழுமத்தின் கடன் அதிகரித்திருப்பது பெரும் அச்சமாகப் பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் அதானி குழுமம் உலக நாடுகளில் இருக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பெறும் கடன் மார்ச் 31, 2024 முடிவில் ரூ. 63,781 கோடியிலிருந்து ரூ. 63,296 கோடியாகச் சிறிய அளவு குறைந்துள்ளது. மேலும் உலகளாவிய மூலதனச் சந்தைகளிலிருந்து பெற்றுள்ள கடன் ரூ. 72,794 கோடியிலிருந்து ரூ. 69,019 கோடியாகக் குறைந்துள்ளது.
வெளிநாட்டுச் சந்தையில் இருந்து பெறப்படும் கடன் குறைந்துள்ள வேளையில், உள்நாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்தில் பெறப்படும் கடன் அதிகரித்துள்ளது. மேலும் மார்ச் முடிவுக்குள் அதானி குழுமத்தின் மொத்த கடன் வருடாந்திர அடிப்படையில் சுமார் 6% அதிகரித்துள்ளது. அதாவது வெளிநாட்டில் வாங்கிய கடனை குறைத்துவிட்டு உள்நாட்டில் அதிக கடன் வாங்கியுள்ளது அதானி குழுமம்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications