இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமம் ஹாஸ்பிடாலிட்டி துறையில் பெரிய அளவில் நுழைய தயாராகி வருகிறது. அதானி குழுமம் ஏற்கனவே துறைமுகம் முதல் ரியில் எஸ்டேட், சிமிமெண்ட் முதல் மின்சாரம் வரையில் பல துறையில் இயங்கி வரும் வேளையில் புதிதாக இந்தியா முழுவதும் 60க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை கட்ட திட்டமிட்டுள்ளது.
இந்த ஹோட்டல்கள் பெரும்பாலும் அதானி நிர்வகிக்கும் விமான நிலையங்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் மதிப்பு கூட்டு ரியல் எஸ்டேட் திட்டங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதானி குழுமத்தின் கீழ் சுமார் 8 விமான நிலையங்கள் தனது கட்டுப்பாட்டில் உள்ளது.

அதானியின் ஸ்மார்ட் ஐடியா
பொதுவாக ஹோட்டல் துறையில் லாபம் குறைவு, அதேபோல் கடுமையான நிர்வாக பணிகள் கொண்ட துறை என்பதால், அதானி குழுமம் மிகவும் ஸ்மார்ட்டாக தினசரி நிர்வாகத்தில் ஈடுபடாமல் சொத்துக்களை மட்டும் உரிமை கொண்டிருக்கும் வர்த்தக மாடல் கீழ் இயங்க உள்ளது.
அதாவது ஹோட்டலுக்கான நிலத்தை வாங்கி, கட்டுமானம் செய்து இதன் இயக்கத்தை சர்வதேச ஹோட்டல் நிறுவனங்களான மேரியாட் அல்லது வெஸ்டின் போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்.
இந்த வர்த்தக மாடலின் கீழ் அதானி குழுமம் ஹோட்டலின் உரிமையாளராக இருந்து வாடகை மற்றும் செயல்திறன் அடிப்படையிலான கட்டணத்தை பெறும். இதுபோன்ற மாடல் இந்தியாவில் ஏற்கனவே சேலட் ஹோட்டல்ஸ் போன்ற நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதன் மூலம் ஹோட்டல் நிறுவனங்களுக்கு முதலீடு குறைவு, உரிமையாளர்களுக்கு நிலையான வருவாய் கிடைக்கும்.
எதற்காக இந்த ஹோட்டல்
அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் கீழ் தான் இந்த ஹோட்டல் திட்டங்கள் செயல்படுத்தப்படும். விமான நிலையங்களின் வருவாய் இரு பிரிவுகளின் கீழ் வரும் - விமானம் சார்ந்த (லேண்டிங் கட்டணம், விமான பார்கிங் கட்டணம் போன்றவை) மற்றும் விமானம் சாராத (கடைகள், உணவு, விளம்பரம் போன்றவை).
தற்போது விமானம் சார்ந்த வருவாய் அதிகம் இருந்தாலும், ஹோட்டல்கள் மூலம் விமானம் சாராத வருவாயை அதிகரிக்க முடியும். ஹோட்டல்கள் விமான பயணிகள், வணிக பயணிகள் தங்கும் வசதியை விமான நிலையத்தின் அருகிலேயே தரும். இதோடு சிறப்பு பிக் அப், டிராப் வசதிகளையும் அதானி குழுமம் அளிக்க முடியும். இது விமான நிலையங்களை வெறும் போக்குவரத்து மையங்களாக இல்லாமல் நகர வளர்ச்சி மையங்களாக மாற்றும் மிக முக்கியமான முயற்சியாகும்.
நவி மும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளதால், இப்பகுதியில் மட்டும் சுமார் 15 ஹோட்டல்கள் கட்ட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை விமான நிலையம் அருகே பெரிய கன்வென்ஷன் சென்டர் உருவாக்க திட்டம் உள்ளது.
ஏற்கனவே அதானி குழுமம் விமான நிலைய நிறுவனத்தை ஐபிஓ மூலம் பட்டியலிட திட்டமிட்டு வரும் வேளையில், இந்த ஹோட்டல் திட்டம் விமான நிலைய பிரிவுக்கு தொடர் வருவாயும், மதிப்பு கூட்டு வர்த்தகமாக இருக்கும். இதேவேளையில் அதானி குழுமம் சஹாரா குழுமத்தின் கீழ் இருக்கும் சொத்துக்களை வாங்க திட்டமிட்டு வரும் வேளையில், இதில் சில ஹோட்டல்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications