அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து 3 முக்கியமான விஷயங்களை ஆய்வு செய்ய செபிக்கு உத்தரவிட்ட கையோடு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரேயின் தலைமையில் திரு ஓ.பி.பட், ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.பி.தேவதத், திரு.நந்தன் நிலகேணி, திரு.கே.வி.காமத், திரு.சோமசேகரன் சுந்தரேசன் ஆகியோர் அடங்கிய குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.
இந்த சிறப்பு குழு அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து செபி இதுவரையில் செய்த ஆய்வின் விபரங்களை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகளின் விலையை முறைகேடான வகையில் உயர்த்தப்பட்டு உள்ளது என்பதை இதுவரையிலான ஆய்விலும் விசாரணையிலும் உறுதியான ஆதாரங்கள் உடன் கண்டுப்பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

இதைவிட முக்கியமாக செபி இந்த ஆய்வின் போது அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது, ஜனவரி 24 ஆம் தேதி தான் அதானி குழுமம் குறித்து அமெரிக்காவின் ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டது. ஆனால் அதற்கு முன்னரே அதானி குழும பங்குகள் மீதான Short Position பெரிய அளவில் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து செபி-யின் ஆய்வில் ஹிண்டன்பர்க் தனது ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாகவே 6 நிறுவனங்கள் அதானி குழும பங்குகளில் ஷாட் பொசிஷன் செய்துள்ளது. அதாவது அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே ஹிண்டன்பர்க் வெளியிடப்போகும் அறிக்கை குறித்த தகவலை அறிந்துக்கொண்ட் ஷாட் பொசிஷன் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த 6 நிறுவனங்களில் 4 வெளிநாட்டு போர்ட்ரோலியோ நிறுவனங்களும், ஒரு கார்பரேட் நிறுவனமும், ஒரு தனிநபரும் அடங்குவார்கள் என சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள சிறப்பு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த வர்த்தகம் பெரிய அளவிலான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே அதானி குழும பங்குகளை ஷாட் செய்யப்பட்டு உள்ளதால் அதிகம் லாபம் பெற்று இருக்க கூடும்.
பங்குச்சந்தையில் பெரிய பணத்தைப் பார்க்க சில வழிகள் உள்ளது, அதில் முக்கியமானது Short Position, மற்றொன்று Long Postion. இதில் Short Position என்றால் ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் எனப் பிட்டிங் செய்து முதலீடு செய்வது, இதில் பங்கு விலை குறைந்தால் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு லாபம். மற்றொன்று Long Postion இதில் பங்கு விலை உயர்ந்தால் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு லாபம்.
அதானி குழுமம் குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் பங்கு சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி-க்கு 2 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 6 மாதம் கூடுதல் அவகாசம் செபி கேட்டு மனு கொடுத்தது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் செபியின் 6 மாதம் கால அவகாச கோரிக்கையை ரத்து செய்து வெள்ளிக்கிழமை அறிவித்த 3 மாத அவகாசம் அடிப்படையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி செபி அதானி குழுமம் குறித்து குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை விடுத்த போது நீதிபதிகள் ஏற்கனவே கொடுத்த 2 மாதம், தற்போது கொடுக்கப்பட்டு உள்ள கூடுதலான 3 மாதம் சேர்த்தால் மொத்தம் 5 மாதம் அவகாசம் கிடைத்துள்ளது என செபி தரப்பிடம் தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு செபி-யின் விசாரணையை கண்காணித்தும், ஆய்வு செய்து வரும் வேளையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்ட 13 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர்கள் உடன் தொடர்பு இருக்கலாம் என்று செபி சந்தேகிப்பதாக சுப்ரீம் கோர்ட் அமைத்த குழு கண்டறிந்துள்ளது.
மேலும் செபி அக்டோபர் 2020 முதல் அதானி குழுமத்தின் பங்கு இருப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அதில் உறுதியான ஆதாரங்களை செபி கண்டறியவில்லை எனவும் இந்த சிறப்பு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications