அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்: SEBI அறிக்கையின் விசாரணை உச்ச நீதிமன்றம் அக்.20 ஒத்திவைப்பு..!!

உச்ச நீதிமன்றத்தில் இன்று அதானி - ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான செபியின் அறிக்கை விசாரணைக்கு வரும் காரணத்தால் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி பவர் உள்ளிட்ட அதானி குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் பெரிய அளவில் சரிந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட் விசாரணையை அக்டோபர் 20 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் காலை வர்த்தகத்தில் 3% வரையில் சரிந்தன, அதானி பவர், அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் 1 சதவீதத்திற்கு மேல் சரிந்தன. இதே நேரத்தில் அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி ஆகியவை 0.7 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையில் சரிந்தன.

அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்: SEBI அறிக்கையின் விசாரணை உச்ச நீதிமன்றம் அக்.20 ஒத்திவைப்பு..!!

அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு வெளியிட்ட குற்றச்சாட்டுகள் மூலம் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டனர். இதனால் அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-யை விசாரிக்க முக்கிய கோணத்தில் விசாரிக்க உத்தரவிட்டது.

கடந்த 4 மாதத்தில் செபி பல கட்டமாக அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தை விசாரணை செய்து உச்ச நீதிமன்றத்தில் சில வாரங்களுக்கு முன்பு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை தான் சுப்ரீம் கோர்டு இன்று சிறப்பு குழுவின் ஆய்வுகள் உடன் விசாரிக்க உள்ளது.

கடந்த மாதம், அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் ஒரு பொதுநல வழக்கு வந்தது. இதில் உச்ச நீதிமன்றத்தில் இருந்து முக்கியமான உண்மைகளை செபி மறைக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தது. இந்த பொதுநல வழக்கில் அதானி நிறுவனங்களின் பங்குக் கையாடல் தொடர்பான வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) கடிதத்தை மறைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

செபி தனது ஆய்வுகளை முடித்து ஆகஸ்ட் மாதம் அறிக்கை தாக்கல் செய்தது, இந்த நிலையில் கடந்த மாதம் அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் நியமித்த குழுவின் உறுதி தன்மை குறித்த கேள்விகள் புதிய வழக்குகள் வந்தது.

செபி-யின் ஆகஸ்ட் மாத விசாரணை அறிக்கையின் படி அதானி குழுமம் செய்த 24 பரிமாற்றங்களில் 22 பரிமாற்றங்களின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாகவும், 2 பரிமாற்றங்களின் விசாரணை இடையில் இருப்பதாக தெரிவித்தது. செபி இந்த 24 பரிமாற்றங்கள் குறித்த விசாரணையில் 5 நாடுகளில் செய்யப்பட்ட பரிமாற்றங்கள் குறித்து தரவுகளை சேகரித்துள்ளதாக தெரிகிறது.

செபி அமைப்பின் இந்த ஆய்வின் மூலம் அதானி குழும தலைவர் மற்றும் ப்ரோமோட்டர்கள் வெளிநாட்டு போலி நிறுவனங்கள் வாயிலாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை கூடுதலாக தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பங்கு விலையை முறைகேடாக உயர்த்தியது மட்டும் அல்லாமல், செபியின் Minimum Public Shareholding (MPS) விதிமுறைகளை மீறியதா என்பது குறித்து தெரியவரும், இந்த முடிவை எதிர்நோக்கி தான் ஒட்டுமொத்த முதலீடு சந்தையும் காத்திருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+