அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில் செபியின் விசாரணையை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு குழுவில் இருக்கும் சில உறுப்பினர்கள் குழுவின் நலன்களுக்கும், அதன் அடிப்படை தன்மைக்கும் முரணாக இருப்பதாக கூறி ஒருவப் பெட்டிஷன் போட்டு உள்ளார். மேலும் இந்த பெட்டிஷனில் புதிய நிபுணர் குழுவை அமைக்குமாறு உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் செபியின் விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்திருக்கும் வேளையில் சுப்ரீம் கோர்ட் நியமித்த குழுவிலேயே முரண்பாடு இருப்பதாக வந்துள்ள குற்றச்சாட்டு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் முன்னணி ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதானி குழுமம் செய்த மோசடி மற்றும் கையாடல்களை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, ஒழுங்குமுறை விதிகளை மீறியதால் முதலீட்டாளர்கள் பணத்தை இழக்க வழிவகுத்ததா என்பதை ஆராய, மார்ச் மாத தொடக்கத்தில், உச்ச நீதிமன்றம் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையிலான குழுவை அமைத்தது.
இந்தக் குழுவில் வங்கி துறையின் மூத்த அதிகாரிகளான கே.வி.காமத் மற்றும் ஓ.பி.பட், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி, செக்யூரிட்டீஸ் வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசன் மற்றும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.தேவதர் ஆகியோர் உள்ளனர். இந்த குழுவை மத்திய அரசின் பரிந்துரையை ஏற்க மறுத்து சுப்ரீம் கோர்ட் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் முன்னாள் எஸ்பிஐ வங்கி தலைவர் O.P. Bhatt தற்போது Greenko நிறுவனத்தின் சேர்மனாக உள்ளார். மார்ச் 2022 முதல் Greenko மற்றும் அதானி குரூப் மிகவும் நெருங்கி பணியாற்றி வருகிறது, இவர்களது கூட்டணி குறித்து 14.03.2022 தேதி அறிக்கை வெளியிட்டு உள்ளது.
மேலும் விஜய் மல்லையாவின் 1.2 பில்லியன் டாலர் வங்கி மோசடியில் எஸ்பிஐ வங்கி முறைகேடாக கடன் வழங்கிய வழக்கில் சிபிஐ O.P. Bhatt-ஐ சிபிஐ விசாரித்தது என்றும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். எஸ்பிஐ வங்கியின் சேர்மன் ஆக 2006 முதல் 2011 வரையில் O.P. Bhatt இருந்தார். இந்த காலக்கட்டத்தில் தான் எஸ்பிஐ வங்கி விஜய் மல்லையாவுக்கு அதிகப்படியான கடன்களை கொடுத்துள்ளது.
இதேபோல் 1996 முதல் 2009 வரையில் ஐசிஐசிஐ வங்கியின் சேர்மன் ஆக இருந்த கே வி காமத் இவ்வங்கியின் மோசடி வழக்கின் FIR-ல் சேர்க்கப்பட்டு உள்ளார். சந்தா கோச்சார் 2009 முதல் 2018 வரையில் வீடியோகான் குரூப்-க்கு அளித்த கடனில் அனைத்தும் NPA ஆக மாறியது. இந்த காலக்கட்டத்தில் கே வி காமத் இவ்வங்கியின் non-executive chairman ஆக இருந்தார்.
இதேபோல் செக்யூரிட்டீஸ் வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசன் பல முறை செபி நிர்வாக குழுவிற்கு முன்பு அதானி குழுமத்தின் சார்பாக வாதாடியுள்ளார்.
எனவே இந்த மனுவில் நிதியியல், சட்டம், பங்குச்சந்தை துறையில் இருக்கும் வல்லனர்களை சரியாக தேர்வு செய்து, அதானி குழுமத்திற்கு எவ்விதமான தொடர்பும் இல்லாத குழுவின் அவசியத்தையும், அடிப்படையும் பாதிப்படையாமல் இருக்கும் நபர்களை தேர்வு செய்து குழுவில் நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications