அதானி குழுமத்தின் பங்கு விலையில் முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகளை அமெரிக்காவின் ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் பட்டியலிட்டது. இந்த குற்றச்சாட்டுகள் மீதான செபியின் விசாரணை குறித்து திங்கட்கிழமை மாலையில் சுப்ரீம் கோர்ட்-ல் அறிக்கை சமர்ப்பித்தது.
இன்று செவ்வாயன்று வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் விசாரணையின் நிலை குறித்து கேட்டப்போது, நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் அதாவது ஆகஸ்ட் 14க்குள் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியது.

செபி தரப்பில் இருந்து ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றம் விசாரணை நிலை குறித்த கேள்விக்கு, தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான பென்ச்-க்கு உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை விசாரணைக்கு அவகாசம் அளித்துள்ள நிலையில், வேகமாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் உடன் இன்றைய விசாரணையில் நீதிபதிகள் பி எஸ் நரசிம்ஹா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்-க்கு செபி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு செபி திங்களன்று பதில் அறிக்கையை தாக்கல் செய்ததாக கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்று SEBI பதில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை திங்கட்கிழமை மாலை தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால், உங்கள் முன்னிலையில் இல்லை என துஷார் மேத்தா விளக்கம் கொடுத்தார். செபி உச்ச நீதிமன்றத்தில் அதானி - ஹிண்டர்பெர்க் ரிசர்ச் தொடர்பான வழக்கு குறித்து சுமார் 41 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
செவ்வாயன்று நடந்த விசாரணையின் போது, நிபுணர் குழு தனது அறிக்கையில் சில பரிந்துரைகளை வழங்கியது. அதற்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் துஷார் மேத்தா விளக்கம் கொடுத்தார். மேலும் அதானி குழுமத்தின் பங்கு விலையில் முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் மீதான செபியின் விசாரணை வேகமாக நடந்து வருவதை துஷார் மேத்தா பல முறை உறுதி செய்தார்.
செபி தனது உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் 2019ல் ஆப்ஷோர் பண்ட்ஸ் குறித்து செபியிடம் விபரங்களை சமர்ப்பிப்பதில் செய்யப்பட்ட மாற்றங்கள் மூலம், நிதி ஆதாரங்களின் விபரங்களை திரட்டுவதில் பெரிய பிரச்சனை இருக்காது என விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பான கேள்வியை உச்ச நீதிமன்றத்தின் நிபுணர் குழு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications