சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி இன்று அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த விசாரணையின் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது, இந்த அறிக்கையில் செபி எதை கண்டுப்படித்துள்ளது என்பதை பட்டியலிடாமல் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விபரங்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
செபியின் விசாரணை அறிக்கையின் படி அதானி குழுமம் செய்த 24 பரிமாற்றங்களில் 22 பரிமாற்றங்களின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாகவும், 2 பரிமாற்றங்களின் விசாரணை இடையில் இருப்பதாக ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

SEBI அமைப்பு முதலில் அதானி குரூப் செய்த 13 பரிமாற்றங்களின் விதிமீறல்கள் குறித்தும், 12 வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் பரிமாற்றம் குறித்து செபி விசாரணை செய்தது. இதில் சில பரிமாற்றங்கள் வரி ஆதாயம் நிறைந்த நாடுகளில் நடந்துள்ளது, இந்த நிலையில் 12 வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் பரிமாற்றம் குறித்து விபரங்களை சேகரிக்க அதிகப்படியான சவால்களை எதிர்கொண்டது.
மேலும் செபி இந்த 24 பரிமாற்றங்கள் குறித்த விசாரணையில் 5 நாடுகளில் செய்யப்பட்ட பிரமாற்றங்கள் குறித்து தரவுகளை சேகரித்துள்ளதாக தெரிகிறது. மேலும் நிலுவையில் உள்ள 2 பரிமாற்றங்கள் தொடர்பான விபரங்கள் வெளிநாட்டில் இருந்து வருவதற்கான செபி காத்திருப்பதாக சுப்ரீம் கோர்ட்-க்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செபி தனது இறுதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 14 ஆம் தேதி கடைசி நாளாக இருந்தாலும், இதுக்குறித்த விசாரணை ஆகஸ்ட் 29 ஆம் தேதி தான் நடக்க உள்ளது. இதற்கிடையில் தான் 17 பரிமாற்றங்கள் குறித்த விசாரணையை முடித்து 15 நாள் அவகாசத்தை செபி கேட்டது.
இந்த ஆய்வில் அனைத்து பங்குதாரர்களும் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளது, இதில் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் செபி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ரெயூட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவல் படி பார்த்தால் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விபரங்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
செபி இந்த ஆய்வில் அதானி குழும தலைவர் போலி வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை கூடுதலாக தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்ட செபியின் minimum public shareholding (MPS) விதிமுறைகளை மீறியதா என்பது குறித்து தெரியவரும். சுப்ரீம் கோர்ட் விசாரணை 29 ஆம் தேதி நடக்க உள்ளது.


Click it and Unblock the Notifications